For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட்டை விட நட்பு தான் முக்கியம்.. கோலியின் தோளில் வில்லி சாய்ந்த கதை.. மெய்சிலிர்ந்த ரசிகர்கள்

நியூசிலாந்து: வெற்றி பெற்றவுடன் கொண்டாடத்தில் ஈடுபடாமல் விராட் கோலியின் தோள் மீது சாய்ந்ததற்கான காரணம் குறித்து வில்லியம்சன் மனம் திறந்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து கோப்பை வென்றது.

அப்படியே தோனியின் ஸ்டைல்.. கொஞ்சம் கூட மாறல.. ஷபாலி வர்மாவின் செயலால் ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்அப்படியே தோனியின் ஸ்டைல்.. கொஞ்சம் கூட மாறல.. ஷபாலி வர்மாவின் செயலால் ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்

இந்த போட்டி முடிந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகப்போகும் நிலையிலும், அதுகுறித்த பேச்சுக்கள் இன்னும் அடங்கவில்லை.

வைரல் போட்டோ

வைரல் போட்டோ

நியூஸிலாந்து அணியின் வெற்றிக்குப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகூறி வந்தனர். ஆனால் அன்று அனைவருக்கும் 'பிக் ஆஃப் தி டே' வாக அமைந்த புகைப்படம் விராட் - வில்லியம்சன் இணைந்திருந்ததுதான்.

அந்த அணியின் கேப்டன் வில்லியம்ஸனைக் கட்டி அணைத்து இந்திய கேப்டன் கோலி வாழ்த்து தெரிவித்தார். சமூக வலைதளங்களில் இன்றளவும் இந்த புகைப்படம் தீயாக பரவி வருகிறது.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

வில்லியம்சனின் கேப்டன்சியில் நியூசிலாந்து அணிக்கு கிடைத்த முதல் ஐசிசி கோப்பை இது. வெற்றிக்கான ரன்களை அடித்ததும் மறுமுணையில் இருந்த சக நாட்டு வீரர் ராஸ் டெய்லரை கட்டிப்பிடிக்காமல், இந்திய கேப்டன் கோலியின் நெஞ்சில் சாய்ந்தார் வில்லியம்சன். இதற்கான காரணம் புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர்.

காரணம்

காரணம்

இந்நிலையில் அந்த தருணம் குறித்து வில்லியம்சன் மனம் திறந்துள்ளார். அதில், எனக்கு மறக்கமுடியாத தருணம் அது. எனக்கும் விராட் கோலிக்குமான நட்பு நீண்ட வருடங்களாக, பல்வேறு சூழ்நிலைகளை கடந்தது. எங்களுக்கு இடையேயான நட்பு கிரிக்கெட் போட்டியை விட ஆழமானது. இருவருக்குமே அது அப்படிதான் எனக்கூறியுள்ளார்.

சிறந்த ஆட்டம்

சிறந்த ஆட்டம்

போட்டி குறித்து பேசிய வில்லியம்சன், இரு அணிகளும் மிகவும் சவால் கொடுத்தது. இதனால் ஆட்டத்தில் கடைசி நாள் வரை பரபரப்பு நிலவியது. எனினும் ஆட்டத்தின் முடிவு ஒன்றை மட்டும் தான் உணர்த்துகிறது. கத்திக்கு ஒரே ஒரு முனைதான் இருக்கும். அதற்கு மதிப்பு கொடுத்தே ஆக வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, July 1, 2021, 21:04 [IST]
Other articles published on Jul 1, 2021
English summary
Newzealand Skipper Kane Williamson Gives his Views on his special viral picture with Virat Kohli after winning the WTC Trophy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X