For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"உள்ளூர் புலி" தானா?.. "உலக லெவல்" கிடையாதா? கேன் வில்லியம்சனுக்கு வந்த புது சோதனை!

மும்பை: சஞ்சய் மஞ்சரேக்கர் எந்த நேரத்தில் வாய் திறந்தாரோ... இப்போது லேட்டஸ்ட் "ATG" சிக்கலில் சிக்கியிருப்பவர் கேன் வில்லியம்சன்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கவிருக்கும் நிலையில், அஷ்வினை 'All Time Great' எனக்கூறுவதை ஏற்க முடியாது என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர், "ரவிச்சந்திரன் அஸ்வின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் விளையாடி வருவதை பார்க்கும் போது அவர் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் 'எல்லா காலத்திலும் சிறந்த வீரர்' என மக்கள் அவரை கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்றார்.

 அஷ்வின்

அஷ்வின்

அஸ்வினிடம் உள்ள பிரச்னை என்னவென்றால் SENA என கூறப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாகும். ஆனால் இந்த நாடுகளில் அஸ்வின் ஒரு முறை 5 விக்கெட் வீழ்த்தியதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இந்திய ஆடுகளங்களில் மட்டுமே அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். இந்திய ஆடுகளங்கள் அவருடைய சுழலுக்கு ஏற்றார்போல் இருப்பதால்தான் அவரால் இங்கு விக்கெட் வீழ்த்த முடிகிறது.

 ஆல் டைம் கிரேட்

ஆல் டைம் கிரேட்

அஸ்வினை போலவே தான் ரவீந்திர ஜடேஜாவும், இந்திய ஆடுகளங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர். அதே போல கடந்த இங்கிலாந்து தொடரில் இந்திய ஆடுகளங்களில் அஷ்வினைவிட அக்சர் பட்டேல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினார். பல வீரர்களும் இப்படி இருக்கும் போது அஸ்வினை எப்படி அனைத்து கால சிறந்த பவுலர் என்று கூறுவது?" சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் அஷ்வின் குறித்தும், ஜடேஜா பற்றியும் சஞ்சய் மஞ்சேரக்கர் இப்படி கூறியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கு அஷ்வின், 'அந்நியன்' படத்தின் மீம் ஒன்றை போட்டு பதிலடி கொடுக்க அது ஏகபோகத்துக்கு வைரல் ஆனது.

 லோ ஆவரேஜ்

லோ ஆவரேஜ்

இது ஒருபுறம் இருக்க, கேன் வில்லியம்சன், "All Time Great" பேட்ஸ்மேனா என்ற விவாதம் மறுபுறம் எழுந்துள்ளது. அதாவது, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக அவர் 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வைத்துள்ள ஆவரேஜ் 40.70. இந்த நான்கு அணிகளுக்கும் எதிராக, தன் சொந்த மண்ணான நியூசிலாந்தில் அவர் வைத்துள்ள ஆவரேஜ் 51.53. அதுவே. இந்த நான்கு அணிகளுக்கு எதிராக அந்தந்த நாடுகளில் விளையாடி அவர் வைத்துள்ள ஆவரேஜ் 33.47

 சொல்லுங்க சஞ்சய் ஜீ

சொல்லுங்க சஞ்சய் ஜீ

அதேபோல், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக 42 டெஸ்ட் போட்டிகளில் அவர் வைத்துள்ள ஆவரேஜ் 67.93 (அடேங்கப்பா!). குறிப்பாக, இந்த சுமாரான அணிகளுக்கு எதிராக உள்நாட்டில் அவர் வைத்துள்ள ஆவரேஜ் 78.16. அதுவே அந்தந்த நாடுகளில் விளையாடி அவர் வைத்துள்ள ஆவரேஜ் 58.63. ஆகமொத்தம், உள்ளூரில் புலியாக இருக்கும் கேன் வில்லியம்சன், உலகின் டாப் நான்கு அணிகளுக்கு எதிராக அந்தந்த நாடுகளில் பகிரங்கமாக பம்மியிருப்பது தெரியவருகிறது. அப்படியெனில், சஞ்சய் மஞ்சரேக்கரின் கோட்பாடு படி இவர் "All Time Great" இல்லையோ...? சொல்லுங்க சஞ்சய் ஜீ.. சொல்லுங்க!

Story first published: Tuesday, June 8, 2021, 14:44 [IST]
Other articles published on Jun 8, 2021
English summary
williamson test average away conditions - கேன் வில்லியம்சன்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X