For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விநோதமான தப்பு பண்ணும் பிரபல கேப்டன்.. !! ஐசிசியிடம் போட்டி நடுவர்கள் திடீர் புகார்..!

துபாய்: நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் பவுலிங் சந்தேகத்திற்கு உரிய வகையில் இருப்பதாக வந்த புகார் குறித்து ஐசிசி விசாரணை நடத்துகிறது.

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் ஆடுகின்றன. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் பந்துவீசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீசினார். அதே போன்று இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் தனஞ்செயாவும் பவுலிங் போட்டார். இருவரின் பவுலிங் முறையும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

ஒரு ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடியவர்..! முக்கிய அணியின் துணை பயிற்சியாளராக நியமனம்..! ஒரு ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடியவர்..! முக்கிய அணியின் துணை பயிற்சியாளராக நியமனம்..!

பவுலிங் ஆச்சர்யம்

பவுலிங் ஆச்சர்யம்

அதில் வில்லியம்சனின் மீதான பவுலிங் புகார் தான் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருக்கிறது. இத்தனைக்கும் அவர் அரிதாக தான் பந்துவீசுவார். அந்த வகையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 3 ஓவர்கள் வீசினார்.

புகார் என தகவல்

புகார் என தகவல்

தனஞ்செயா இலங்கை அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர். இந்த இருவரின் பவுலிங் ஆக்ஷன், முறையாக இல்லை, சந்தேகத்திற்குரிய வகையில் இருக்கிறது என்று ஐசிசி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

புகார் உண்மையே

புகார் உண்மையே

தற்போது அந்த தகவலை ஐசிசி உறுதிப்படுத்தி இருக்கிறது. கடந்த 18ம் தேதி ஐசிசியிடம் போட்டியை நடத்தும் அதிகாரிகள் புகாரளித்துள்ளதாக ஐசிசி கூறியிருக்கிறது. இந்த புகாரின் பேரில் ஐசிசி விரைவில் விசாரணை நடத்தும் என்று தெரிகிறது.

14 நாட்கள் வெயிட்டிங்

14 நாட்கள் வெயிட்டிங்

புகார் கிடைத்த தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் வில்லியம்சன் மற்றும் தனஞ் செயாவின் பவுலிங் ஆக்ஷன் பரிசோதிக்கப்படும். அந்த சோதனையின் முடிவு வரும்வரை, இருவரும் பந்துவீசுவதற்கு தடையில்லை. அதாவது 2வது டெஸ்ட் 22ம் தேதி தொடங்குவதால், தனஞ்செயா பந்துவீசுவதில் எந்த சிக்கலும் இல்லை.

Story first published: Tuesday, August 20, 2019, 14:46 [IST]
Other articles published on Aug 20, 2019
English summary
Newzeland captain Kane williamson reported for suspect bowling action by icc.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X