For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னா அடி... 34 பவுண்டரி... இரட்டை சதம் அடித்து நொறுக்கிய கேன் வில்லியம்சன்!

ஹாமில்டன் : மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிவரும் முதல் டெஸ்ட் போட்டியில் அந்த அணி 519 ரன்களை குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்துள்ளது.

அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த போட்டியில் தனது 3வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு குவிந்துவரும் பாராட்டுக்களால் சமூக வலைதளங்களே திணறி வருகிறது.

முதல் டெஸ்ட்

முதல் டெஸ்ட்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் டி20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் திட்டமிடப்பட்டு டி20 தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து தற்போது ஹாமில்டனின் செடன் பார்க்கில் டெஸ்ட் தொடர் துவங்கியுள்ளது. இதில் நியூசிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை பதிவு செய்துள்ளது.

519 ரன்களுக்கு டிக்ளேர்

519 ரன்களுக்கு டிக்ளேர்

முதலில் களமிறங்கி ஆடிய நியூசிலாந்து அணி 519 ரன்களை குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்துள்ளது. அணியின் டாம் லாதம், கேன் வில்லியம்சன் மற்றும் கைல் ஜாமீசன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தையடுத்து அணியின் ஸ்கோர் விறுவிறுவென எகிறியது.

3வது இரட்டை சதம்

3வது இரட்டை சதம்

இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய கேப்டன் கேன் வில்லியம்சன் தனது 3வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்துள்ளார். நேற்றைய முதல்நாள் போட்டியில் 97 அடித்திருந்த அவர், போட்டியின் துவக்கத்திலேயே டெஸ்ட் போட்டிகளில் தனது 22வது சதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து தொடர்ந்து அதிரடி சரவெடியாய் அவரது ஆட்டம் நீடித்த நிலையில் இரட்டை சதத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.

251 ரன்கள் குவிப்பு

251 ரன்கள் குவிப்பு

கடந்த 2015 ஜனவரியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 242 ரன்களை குவித்து தனது முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்த வில்லியம்சன், தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்தார். தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 251 ரன்களை விளாசியுள்ளார்.

2 இரட்டை சதம்

2 இரட்டை சதம்

தற்போதைய போட்டிகள் ஹாமில்டனில் நடைபெற்று வருகின்றன. இந்த மைதானம் கேன் வில்லியம்சனுக்கு மிகவும் ராசியானது. இங்குதான் அவர் இரண்டு இரட்டை சதங்களையும் 17 சதங்களையும் அடித்து தூள் கிளப்பியுள்ளார். இதனிடையே வில்லியம்சனுக்கு டிவிட்டர் பக்கங்களில் முன்னணி விளையாட்டு வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஐசிசியும் வாழ்த்து தெரிவித்துள்ளது.

Story first published: Friday, December 4, 2020, 13:33 [IST]
Other articles published on Dec 4, 2020
English summary
New Zealand declared their innings on a mammoth total of 519 for 7
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X