For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சினுக்கு செஞ்சுரி அடிக்கத் தெரியும்.. ஆனா.. முன்னாள் ஜாம்பவான் கடும் விமர்சனம்.. ரசிகர்கள் ஷாக்!

மும்பை : சச்சின் டெண்டுல்கர் குறித்து அதிர வைக்கும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார் முன்னாள் இந்திய அணி கேப்டனும், ஜாம்பவானும் ஆன கபில் தேவ்.

Recommended Video

Ganguly Changed Indian Cricket Part 5 | How Ganguly became captain

சச்சின் டெண்டுல்கர் தான் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 51 சதங்கள் குவித்துள்ளார்.

அவருக்கு இரட்டை சதம் மற்றும் முச்சதம் அடிக்க தெரியாது என கபில் தேவ் அதிர வைக்கும் கருத்தை கூறி உள்ளார்.

சிறப்பான சம்பவத்தை செஞ்சிருக்கீங்க... பிராட்டை வாழ்த்திய சச்சின், பாண்டிங் சிறப்பான சம்பவத்தை செஞ்சிருக்கீங்க... பிராட்டை வாழ்த்திய சச்சின், பாண்டிங்

அதிக சதம்

அதிக சதம்

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். ஆனால், இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் கூட இடம் பெறவில்லை. அது குறித்து தான் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார் கபில் தேவ்.

பட்டியல்

பட்டியல்

அதிக டெஸ்ட் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேன் 12 இரட்டை சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். மாரவன் அட்டப்பட்டு, வீரேந்தர் சேவாக், ஜாவேத் மியான்தத், யூனிஸ் கான், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

டெஸ்ட் இரட்டை சதங்கள்

டெஸ்ட் இரட்டை சதங்கள்

சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் முதன் முறையாக இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனையையும் செய்துள்ளார். ஆனால், அவரால் டெஸ்ட் போட்டிகளில் 200 போட்டிகளில் ஆறு இரட்டை சதங்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

இரக்கமற்ற பேட்ஸ்மேன் கிடையாது

இரக்கமற்ற பேட்ஸ்மேன் கிடையாது

இது பற்றி கபில் தேவ் கூறுகையில், "சச்சினிடம் நிறைய திறமை உள்ளது. அவருக்கு எப்படி சதம் அடிக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால், அவர் இரக்கமற்ற பேட்ஸ்மேன் கிடையாது. அவருக்கு சதத்தை எப்படி 200, 300ஆக மாற்ற வேண்டும் எனத் தெரியாது." என்றார்.

இன்னும் 10 இரட்டை சதங்கள்

இன்னும் 10 இரட்டை சதங்கள்

"சச்சின் மூன்று முச்சதங்கள், இன்னும் 10 இரட்டை சதங்கள் அடித்து இருக்கலாம். ஏனெனில், அவரால் வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்களின் ஒவ்வொரு ஓவர்களிலும் ஒரு பவுண்டரி அடிக்க முடியும்" என்று குறிப்பிட்டார் கபில் தேவ்.

10 ஆண்டுகள்

10 ஆண்டுகள்

சச்சின் டெண்டுல்கர் தன் முதல் இரட்டை சதத்தை அடிக்க 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார். 1989இல் அறிமுகம் ஆன அவர் 1999இல் தான் தன் முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 51 சதங்களில் 20 மட்டுமே 150 ரன்களை எட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மும்பை வீரர்களின் மனநிலை

மும்பை வீரர்களின் மனநிலை

சச்சின் சதம் அடித்த பின் பெரிய அளவில் ரன் குவிக்காமல் போகக் காரணம் மும்பை வீரர்களின் மனநிலை தான் காரணம் என கூறினார். மும்பை வீரர்கள் சதம் அடித்த பின் மீண்டும் பூஜ்யத்தில் இருந்து தொடங்குவார்கள். அதைத் தான் செய்யக் கூடாது என்கிறேன் என்றார் கபில் தேவ்.

கோலி அதிக இரட்டை சதம்

கோலி அதிக இரட்டை சதம்

சச்சினை விட விராட் கோலி அதிக இரட்டை சதங்கள் அடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சச்சின் ஆறு இரட்டை சதங்கள்அடித்துள்ள நிலையில், கோலி ஏழு இரட்டை சதங்கள் அடித்துள்ளார். சச்சினை விட கோலி சதங்களை 150 ரன்களாக மாற்றும் சதவிகிதமும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 29, 2020, 20:58 [IST]
Other articles published on Jul 29, 2020
English summary
Kapil Dev criticizes Sachin Tendulkar, says he didn’t know how to score double centuries.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X