For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்களால மட்டும் தான் முடியும்னு நம்புனோம்.. வைச்சு செஞ்சிட்டீங்களே கபில் தேவ்? கடுப்பில் ரசிகர்கள்!

Recommended Video

Ravi Shastri back to coach | ரவி சாஸ்திரியே இந்திய அணி பயிற்சியாளர்.. பிசிசிஐ அறிவிப்பு

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்வு முடிவு ஆகஸ்ட் 16 அன்று வெளியானது.

கபில் தேவ் தலைமையிலான குழு ஐந்து பேரிடம் நேர்முகத் தேர்வு நடத்தி, ரவி சாஸ்திரியே மீண்டும் பயிற்சியாளராக தொடர்வார் என அறிவித்தது.

முன்னதாக ஆறு பேர் தலைமை பயிற்சியாளர் தேர்வுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பிடித்தனர். அதில் தற்போது தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி தான் மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என பரவலாக கூறப்பட்டது.

மர்மம் நீடிப்பு

மர்மம் நீடிப்பு

எனினும், கபில் தேவ் தலைமயிலான மூன்று நபர்கள் கொண்ட குழு எனன் முடிவு எடுக்கப் போகிறது என்பது மர்மமாக இருந்தது. அந்த குழுவில் இருக்கும் அன்ஷுமன் கெயிக்வாட் வெளிப்படையாகவே ரவி சாஸ்திரிக்கு தான் வாய்ப்பு அதிகம் என முன்பே பேட்டி கொடுத்தார். எனினும், சில முக்கிய பெயர்களும் பயிற்சியாளர் தேர்வுப் பட்டியலில் இருந்ததால் மர்மம் நீடித்தது.

இருவருக்கு வாய்ப்பு

இருவருக்கு வாய்ப்பு

ரவி சாஸ்திரி தவிர்த்து, டாம் மூடி, மைக் ஹெஸ்ஸன், பில் சிம்மன்ஸ், ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் இறுதிப் பட்டியலில் இருந்தனர். இவர்களில் டாம் மூடி, மைக் ஹெஸ்ஸன் ஆகியோருக்கு வாய்ப்பு அதிகமாக இருந்தது.

ரவி சாஸ்திரி தான்

ரவி சாஸ்திரி தான்

இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் விருப்பமாக ரவி சாஸ்திரி இருந்ததாலும், அவர் பயிற்சியாளராக இருந்த கடந்த இரு ஆண்டுகளில் இந்திய அணி பெற்ற வெற்றிகளையும் கருத்தில் கொண்டு அவருக்குத் தான் வாய்ப்பு என கூறப்பட்டது. பிசிசிஐ அதிகாரிகள் பலர் பெயர் குறிப்பிடாமல் இது குறித்து முன்பே பல முறை பேட்டி அளித்தும் விட்டனர்.

கபில் தேவ் எடுத்த முடிவு

கபில் தேவ் எடுத்த முடிவு

இது எல்லாவற்றையும் தாண்டி கபில் தேவ் வேறு முடிவை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும் புதிதாக எந்த முயற்சியும் செய்யாத கபில் தேவ் கேப்டன் கோலியின் விருப்பமான ரவி சாஸ்திரியை மீண்டும் தேர்வு செய்துள்ளார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

டாம் மூடி மற்றும் மைக் ஹெஸ்ஸன் இருவருக்கும் தேசிய அணிகளை வெற்றிகரமாக வழிநடத்திய அனுபவம் இருந்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரசிகர்களும் இவர்களில் ஒருவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தார்கள்.

கடுப்பில் ரசிகர்கள்

கடுப்பில் ரசிகர்கள்

ஆனால், எதிர்பார்ப்பிற்கு மாறாக ரவி சாஸ்திரியை மீண்டும் தொடர வைத்துள்ளார் கபில் தேவ். அதனால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரவி சாஸ்திரி தான் இந்திய அணியின் பயிற்சியாளர். அதை அவ்வளவு எளிதில் மாற்றி விட முடியாது.

Story first published: Friday, August 16, 2019, 19:21 [IST]
Other articles published on Aug 16, 2019
English summary
Kapil Dev failed to fulfill fans expectations in chosing Indian team head coach
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X