For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த ஜாம்பவான் தான் இந்தியாவின் மிகப் பெரிய மேட்ச் வின்னர்.. கவாஸ்கர் அதிரடி.. அப்ப யுவராஜ், தோனி?

மும்பை : இந்திய அணி உருவாக்கிய மிகப் பெரிய மேட்ச் வின்னர் என ஒரு ஜாம்பவான் வீரரை குறிப்பிட்டுள்ளார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.

Recommended Video

Kapil Dev is the biggest match winner says Sunil Gavaskar

இந்திய அணியில் மேட்ச் வின்னர் என்ற உடன் பலருக்கும் நினைவுக்கு வருவது யுவராஜ் சிங் மற்றும் தோனி தான்.

அவர்கள் இருவரும் பல போட்டிகளை தங்கள் இறுதி நேர அதிரடி பேட்டிங் மூலம் வென்று கொடுத்துள்ளனர்.

சச்சின், கங்குலியை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர் தான் - கௌதம் கம்பீர்!சச்சின், கங்குலியை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் இவர் தான் - கௌதம் கம்பீர்!

யுவராஜ் சிங் - தோனி

யுவராஜ் சிங் - தோனி

குறிப்பாக யுவராஜ் சிங் 2011 உலகக்கோப்பை தொடரில் பல போட்டிகளை வென்று கொடுத்ததை கூறலாம். தோனி பினிஷர் என்பதற்கே புது அடையாளத்தை கொடுத்த வீரர். எத்தனை அழுத்தம் இருந்தாலும் அதை தாண்டி திட்டமிட்டு ஆட வேண்டும் என்ற கலையை செயல்படுத்திக் காட்டியவர்.

யார் அந்த மேட்ச் வின்னர்?

யார் அந்த மேட்ச் வின்னர்?

ஆனால், இவர்கள் இருவரையும் விட சிறந்த மேட்ச் வின்னர் என ஒரு ஏற்றுக் கொள்ளும் காரணத்துடன் சுட்டிக் காட்டி உள்ளார் கவாஸ்கர். அவர் சொல்லும் அந்த மேட்ச் வின்னர் முன்னாள் இந்திய அணி கேப்டனும், கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான கபில் தேவ்.

தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்

தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளர்

கபில் தேவ் வேகப் பந்துவீச்சாளராக இந்திய அணியை உச்சத்துக்கு எடுத்துச் சென்றார். இந்திய அணியின் தலைசிறந்த வேகப் பந்துவீச்சாளராக அவர் பெற்ற புகழை இன்று வரை யாராலும் முந்த முடியவில்லை. அதே போல, இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த ஆல் - ரவுண்டரும் அவர் தான்.

ஆல் - ரவுண்டர் திறன்

ஆல் - ரவுண்டர் திறன்

கேப்டனாக 1983 உலகக்கோப்பை வென்று கொடுத்த கபில் தேவ், அந்த தொடரில் தான் தன் அதிகபட்ச ரன்களான 175 ரன்களை எடுத்து இருந்தார். அதுவும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய போட்டியில் அவர் அந்த ரன்களை எடுத்தார். அப்படி பல போட்டிகளை தன் ஆல்-ரவுண்டர் திறன் மூலம் வென்று கொடுத்துள்ளார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

கவாஸ்கர் கபில் தேவ் பற்றி கூறுகையில், "என் கருத்துப்படி, கபில் தேவ் தான் இந்தியா உருவாக்கிய மிகப் பெரிய மேட்ச் வின்னர். அதற்கு காரணம், அவர் போட்டிகளை தன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டின் மூலமும் வென்று கொடுப்பார்" என்றார்.

கவாஸ்கர் - கபில் தேவ் மோதல்?

கவாஸ்கர் - கபில் தேவ் மோதல்?

கவாஸ்கர் - கபில் தேவ் இடையே அவர்கள் ஆடிய காலத்தில் கேப்டன்சி குறித்த மோதல் இருந்ததாக ஒரு பரபரப்பான சூழல் இருந்தது. ஆனால், அது உண்மை இல்லை என கூறி உள்ளார் கவாஸ்கர். சிலர் தங்களுக்குள் மோதலை உண்டாக்க முயன்றார்கள் என்றும் கூறி உள்ளார்.

நாங்கள் கவலைப்படவில்லை

நாங்கள் கவலைப்படவில்லை

"சில போர்டு உறுப்பினர்கள், அப்போது ஓய்வு பெற்ற சில வீரர்கள், ஊடகங்களுடன் சேர்ந்து கொண்டு எங்களுக்கும் கருத்து வேறுபாட்டை உருவாக்க முயன்றார்கள். ஆனால், நாங்கள் இந்த நாட்டில் இந்த விளையாட்டின் நன்மை பற்றி மட்டுமே யோசித்தோம். அதனால் தான் அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை" என்றார் கவாஸ்கர்.

Story first published: Saturday, June 27, 2020, 19:23 [IST]
Other articles published on Jun 27, 2020
English summary
Kapil Dev is the biggest match winner says Sunil Gavaskar. It means he rates Kapil Dev higher than the likes of Yuvraj Singh and Dhoni.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X