For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லாமே நாங்க தான்.. அந்த விஷயத்தில் அடம் பிடிக்கும் கபில்தேவ் அண்ட் கோ... மண்டை காயும் பிசிசிஐ.!!

மும்பை: இந்திய அணியில் ரவி சாஸ்திரியை கோச்சாக தேர்ந்து எடுத்த கபில் தேவ் தலைமையிலான குழு, மற்ற பயிற்சியாளர்களையும் தேர்வு செய்வோம் என்று விதியில் இல்லாத ஒன்றை பிடித்துக் கொண்டு அடம்பிடிக்கிறது.

இந்திய அணியின் பயிற்சியாளர் குழு பதவிக்காலம் நடப்பு வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. உலக கோப்பை தொடருக்கு பிறகு அனைவரின் பதவிக்காலமும் நீட்டிக்கப் பட்டது.

அந்த காலமும் முடிவடைய உள்ள நிலையில், விண்ணப்பங்கள் கோரப்பட்டன. தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார் ரவி சாஸ்திரி. அவரை கபில் தேவ் தலைமையிலான குழு தேர்ந்தெடுத்து அறிவித்தது.

தோனி, சச்சின், ரோகித்தை அலேக்காக காலி செய்த கோலி..!! யாரும் செய்யாத சாதனை இதுதான்..!! தோனி, சச்சின், ரோகித்தை அலேக்காக காலி செய்த கோலி..!! யாரும் செய்யாத சாதனை இதுதான்..!!

குழுவின் பணி

குழுவின் பணி

தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வது மட்டும்தான் கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை குழுவின் பணியாகும். பேட்டிங், பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்களை தேர்வுக்குழு தான் தேர்வு செய்யும்.

கடிதம்

கடிதம்

ஆனால், ரவி சாஸ்திரி தேர்வை விட மற்றவர்களை செலக்ட் செய்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறது கபில் தேவ் தலைமையிலான குழு. இது தொடர்பாக பிசிசிஐக்கு ஒரு கடிதமும் எழுதி அனுப்பப்பட்டுள்ளது.

பிசிசிஐ விதி என்ன?

பிசிசிஐ விதி என்ன?

அதில், அணியின் நலனை கருத்தில்கொண்டு, அவர்களை தேர்வு செய்வதிலும் தங்களது கருத்தை கேட்டால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. பிசிசிஐ விதிப் படி, தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வது மட்டும்தான் ஆலோசனை குழு பணி.

குழப்பத்தில் பிசிசிஐ

குழப்பத்தில் பிசிசிஐ

எனவே விதியை மீறி கபில் தேவ் தலைமையிலான குழுவின் கோரிக்கையை நிறை வேற்றுவதா அல்லது விதிப்படி செயல்படுவதா என்று குழம்பி இருக்கிறது. ஆலோசனை குழுவின் கோரிக்கையை நிராகரிப்பதா என்றும் பிசிசிஐ ஒரு பக்கம் யோசித்து வருகிறது.

Story first published: Sunday, August 18, 2019, 20:39 [IST]
Other articles published on Aug 18, 2019
English summary
Kapil dev lead panel wants to select support staff, wrote letter to bcci.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X