For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதையா கபில் தேவ் கேட்டாரு? பதவி கிடைக்காத கடுப்பில் கோலி - ரோஹித் ரகசியத்தை உடைத்த பயிற்சியாளர்!

மும்பை : இந்திய அணிக்கு சமீபத்தில் தலைமை பயிற்சியாளர் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தோல்வி அடைந்த இந்திய பயிற்சியாளர் ஒருவர், தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சையான கேள்வி ஒன்றை பற்றி கூறி நெருப்பை பற்ற வைத்துள்ளார்.

தனக்கு பதவி கிடைக்காத கடுப்பில் தான் அந்த பயிற்சியாளர் சர்ச்சையான கேள்வியை பற்றி கூறினார் என்றாலும், அது ரோஹித் - கோலி விஷயத்தை பற்றியது என்பதால் பரபரப்பை கிளப்பி விட்டுள்ளது.

பயிற்சியாளர் தேர்வு

பயிற்சியாளர் தேர்வு

2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான இந்திய அணி பயிற்சியாளரை நியமிக்கும் வேலைகள் தொடங்கின. ரவி சாஸ்திரிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்காமல், பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பம் வாங்கி நிறைய பாவ்லா காட்டியது பிசிசிஐ.

ரவி சாஸ்திரி வெற்றி

ரவி சாஸ்திரி வெற்றி

ரவி சாஸ்திரி தவிர்த்து ஐந்து பேர் இறுதிக் கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். அதில் லால்சந்த் ராஜ்புத், ராபின் சிங் இருவரும் இந்தியர்கள். எல்லா தேர்வுகளும் நடத்தி விட்டு, இறுதியில் தற்போது இருக்கும் ரவி சாஸ்திரியே மீண்டும் பதவியில் தொடர்வார் என கூறியது கபில் தேவ் தலைமையிலான குழு.

கடுப்பில் இந்திய பயிற்சியாளர்கள்

கடுப்பில் இந்திய பயிற்சியாளர்கள்

மேலும், இந்த தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் என ரவி சாஸ்திரி, மைக் ஹெஸ்ஸன் மற்றும் டாம் மூடி பெயர்களை குறிப்பிட்டார் கபில் தேவ். இதில் தான் "செம காண்டு" ஆகி இருக்கிறார் பதவி கிடைக்காத ஒரு இந்திய பயிற்சியாளர்.

என்ன கேள்வி?

என்ன கேள்வி?

அவர் தேர்வின் போது கேட்கப்பட்ட ஒரு கேள்வி குறித்து கூறி இருக்கிறார். விராட் கோலி - ரோஹித் சர்மா விரிசலை நீங்கள் எப்படி கையாண்டு இருப்பீர்கள் என தேர்வில் கேட்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு கேள்வி

இப்படி ஒரு கேள்வி

பிசிசிஐ கோலி - ரோஹித் இடையே சண்டை இல்லை என கூறி வருகிறது. கபில் தேவ் கூட அப்படி எல்லாம் எதுவும் இருக்காது என கூறி இருந்தார். ஆனால், இப்படி ஒரு கேள்வி பயிற்சியாளர் தேர்வில் கேட்கப்பட்டுள்ளது.

என்ன பதில்?

என்ன பதில்?

அதற்கு பதில் அளித்த அந்த இந்திய பயிற்சியாளர், அப்படி ஒரு சண்டை இருப்பதாக தெரியவில்லை. கோலியும் அது உண்மை இல்லை என பேட்டியில் கூறி இருக்கிறார். இதற்கு எப்படி பதில் அளிப்பது என தெரியவில்லை. ஆனால், நான் இதை வளர விட்டு இருக்க மாட்டேன். என்று கூறி இருக்கிறார்.

உண்மை தான்

உண்மை தான்

மேலும், அப்படி ஒரு விரிசல் இருந்தால் தற்போது இருக்கும் பயிற்சியாளர் அதை சரி செய்து இருக்கலாமே எனவும் கேட்டு இருக்கிறார். இந்த கேள்வி பயிற்சியாளர் தேர்வின் போது கேட்கப்பட்டதில் இருந்தே அணியில் இந்த சிக்கல் இருக்கிறது என்பது ஓரளவு உறுதியாகி உள்ளது. ஆனால், வெளியே அப்படி எதுவுமே இல்லை என அனைவரும் மறுக்கத் தான் போகிறார்கள்.

Story first published: Sunday, August 18, 2019, 16:29 [IST]
Other articles published on Aug 18, 2019
English summary
Kapil Dev led CAC asked coaching candidate about solving Kohli - Rohit rift
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X