For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"4 ஓவருக்கே நாக்கு தள்ளுறாங்க".. ஒரு பிரயோஜனமும் இல்ல.. இந்திய பவுலர்களுக்கு கபில்தேவ் "பொளேர்"

மும்பை: இந்திய இளம் பவுலர்கள் திறன் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார் முன்னாள் கேப்டனும், ஆல் ரவுண்டருமான கபில் தேவ்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் இல்லாதது.

தனிமையில் இளம் வீரர்.. தனிமையில் இளம் வீரர்.. "என்ன பண்ணிட்டு இருக்க நீ?".. கூப்பிட்டு "எச்சரித்த" விராட் கோலி

ஆம்! இந்திய அணி அந்த இடத்தில் தான் பெரியளவில் சறுக்கியது. அதுவே இறுதிப் போட்டியை இழப்பதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

பாண்ட்யா மிஸ்ஸிங்

பாண்ட்யா மிஸ்ஸிங்

இந்திய அணியின் மிக முக்கியமான அல்லது ஒரே ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தான். ஆனால், முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த பாண்ட்யா, தீவிர சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆனாலும், அவர் பேட்டிங் தான் செய்கிறாரே ஒழிய, பவுலிங் செய்யவில்லை. இதனால் தான் அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு தேர்வு செய்யப்படவில்லை. பாண்ட்யா அணியில் இடம் பெற்றிருந்தால், நிச்சயம் 30 ரன்களும் அடித்திருப்பார், அட்லீஸ்ட் 2 விக்கெட்டுகளும் எடுத்திருப்பார். இது, போட்டியை முடிவை கூட மாற்றியிருக்கலாம். ஆனால், இப்போது எல்லாம் கைவிட்டுப் போச்சு.

தோற்றதை மாற்ற முடியாது

தோற்றதை மாற்ற முடியாது

அதேசமயம், பாண்ட்யாவுக்கு மாற்றாக ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டாக தேர்வு செய்யப்பட்ட ஷர்துல் தாகூர் மீது கோலி பெரியளவில் நம்பிக்கை வைக்கவில்லை. இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. ஒருவேளை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம். எது எப்படி இருந்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இழந்தாச்சு. அதுதான் யதார்த்தம்.

6 ஓவர்களுக்கும் மேல்

6 ஓவர்களுக்கும் மேல்

இந்நிலையில், இந்திய பவுலர்கள் பவுலிங் திறன் குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேதனையுடன் விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ""நான் நினைப்பது என்னவென்றால், நீங்கள் ஒரு வருடத்தில் 10 மாதம் கிரிக்கெட் விளையாடும்போது, நீங்கள் அதிக காயங்களுக்கு ஆளாக நேரிடும். இன்றைய கிரிக்கெட் மிகவும் அடிப்படை நிலையிலேயே உள்ளது. பேட்டிங் அல்லது பவுலிங் மட்டும் செய்து ஒப்பேற்றிவிடலாம். ஆனால், எங்கள் காலத்தில், நாங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டியிருந்தது. இன்று கிரிக்கெட் மாறிவிட்டது. சில நேரங்களில் ஒரு வீரர் நான்கு ஓவர்கள் வீசிய பிறகு சோர்வடைவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. மேலும் அவர்களை மூன்று அல்லது நான்குக்கு மேல் பந்து வீச அனுமதிக்கப்படவில்லை என்று கேள்விப்பட்டேன். இப்படி இருந்தால் என்ன செய்வது?

 விசித்திரமாக இருக்கு

விசித்திரமாக இருக்கு

எனக்கு நினைவிருக்கிறது, எங்கள் காலத்தில் கடைசியாக வந்து வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யும் வீரர்களுக்கும் 10 ஓவர்கள் வீசுவோம். அந்த மனநிலையை அவர்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க அறிவுறுத்தியது. இன்றைய தலைமுறையினர் நான்கு ஓவர்கள் வீசிவிட்டு சைலன்ட் ஆவதை பார்க்கும் போது, எங்களுக்கு அது விசித்திரமாக உள்ளது" என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

Story first published: Thursday, July 1, 2021, 17:35 [IST]
Other articles published on Jul 1, 2021
English summary
Kapil on fast bowlers Tired Bowling 4 Overs - கபில் தேவ்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X