For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்கு தான் அந்த இடம்.அதை யாரும் தொட முடியாது.. கங்குலிக்கு இடமே இல்லை.. தெறிக்கவிட்ட கபில் தேவ்

டெல்லி : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் தன் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்தார்.

அந்த அணியில் சவுரவ் கங்குலிக்கு இடம் அளிக்கப்படவில்லை. அதே சமயம் தோனி இடத்தை யாராலும் அசைக்க முடியாது என்றும் அவர் கூறி உள்ளார்.

இந்திய அணியில் 2000 முதல் 2010 வரை கோலோச்சிய வீரர்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர்.

கபில் தேவ்

கபில் தேவ்

கபில் தேவ் இந்திய அணிக்கு முதல் ஒருநாள் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஆவார். 1983 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை அவர் தலைமையிலான இந்திய அணி வென்றது. அதன் பின் 28 ஆண்டுகள் கழித்து 2011இல் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை வென்றது.

பேட்டி

பேட்டி

கபில் தேவ் சமீபத்தில் பாலிவுட் நடிகை நேஹா துபியா எடுத்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் சிறந்த இந்திய அணியை தேர்வு செய்யுமாறு அவரிடம் கேட்கப்பட்டது. உடனேயே அவர் 11 வீரர்கள் கொண்ட இந்திய ஒருநாள் அணியை பட்டியலிட்டார்.

மூன்று முக்கிய பேட்ஸ்மேன்கள்

மூன்று முக்கிய பேட்ஸ்மேன்கள்

கபில் தேவ் லெவன் அணியின் துவக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக். அவர் தற்போது உள்ள வீரர்களில் இருவரை மட்டுமே தேர்வு செய்தார். அதில் ஒரு வீரர் விராட் கோலி. அவர் மூன்றாம் வரிசையில் இடம் பெற்றார்.

மிடில் ஆர்டரில் யார்?

மிடில் ஆர்டரில் யார்?

அடுத்து மிடில் ஆர்டரில் ராகுல் டிராவிட், யுவராஜ் சிங் இடம் பெற்றனர். அடுத்ததாக விக்கெட் கீப்பரை தேர்வு செய்த கபில் தேவ், தோனி பெயரை கூறினார். அப்போது தோனி இடத்தை யாராலும் தொட முடியாது என தனியாக குறிப்பிட்டார்.

மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள்

மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள்

வேகப் பந்துவீச்சாளர்களில் ஜாகிர் கான், ஸ்ரீநாத்தை அவர் தேர்வு செய்தார். அடுத்து பும்ராவை தேர்வு செய்தார். அவர் சிறப்பாக ஆடி வருவதாக குறிப்பிட்டார். கபில் தேவுக்கு பின் பெரிய அளவில் வேகப் பந்துவீச்சில் முத்திரை பதித்த வீரர்கள் இவர்கள் மூவர் தான்.

சுழற் பந்துவீச்சாளர்கள்

சுழற் பந்துவீச்சாளர்கள்

சுழற் பந்துவீச்சாளர்களில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங்கை அவர் தேர்வு செய்தார். 90களில் கலக்கிய அணியில் ஸ்ரீநாத் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அவரது அணியில் எட்டு வீரர்கள் 2000 முதல் 2010 வரை இந்திய அணியில் உச்சத்தில் இருந்தவர்கள்.

கபில் தேவ் லெவன் அணி

கபில் தேவ் லெவன் அணி

கபில் தேவ் லெவன் அணி வீரர்கள் - சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், விராட் கோலி, ராகுல் டிராவிட், யுவராஜ் சிங், தோனி, ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே, ஜாகிர் கான், ஸ்ரீநாத், பும்ரா.

Story first published: Tuesday, November 24, 2020, 21:27 [IST]
Other articles published on Nov 24, 2020
English summary
Kapil Dev picks best Indian ODI XI team. He picked Dhoni as wicket keeper. He didn’t chose Ganguly in his team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X