For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்னாது 3 போட்டி நடத்தி வசூல் பண்ணலாமா.. சும்மா இருங்க அக்தர்.. ஷட்டப் செய்த கபில் தேவ்

டெல்லி: கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில் இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை நடத்தி நிதி வசூலிக்கலாம் என்பது ஏற்க முடியாத கோரிக்கை. மக்களின் உயிரைப் பணயம் வைக்க முடியாது என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.

Recommended Video

கொரோனா நிவாரண நிதி... இந்தியா- பாகிஸ்தான் தொடர் நடத்தலாம்

இந்தியா -பாகிஸ்தான் இடையே 3 போட்டிகளைக் கொண்ட ஒரு தொடரை நடத்தலாம். இதில் வசூலாகும் பணத்தைக் கொண்டு இரு நாடுகளிலும் கொரோனாவைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார் சோயிப் அக்தர். இந்தப் போட்டிகளை டிவி மூலமாக ரசிகர்கள் ரசிக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் இது இப்போது சரிப்பட்டு வராது என்று கபில் தேவ் கூறியுள்ளார். மக்களின் உயிரைப் பணயம் வைத்து வசூலிக்ககப்படும் பணம் இந்தியாவுக்குத் தேவையில்லை என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

மக்கள் ஜாலியா இருந்தா தான் வீட்டை விட்டு வெளியே வரமாட்டாங்க.. அதனால.. பிசிசிஐ செய்த காரியம்!மக்கள் ஜாலியா இருந்தா தான் வீட்டை விட்டு வெளியே வரமாட்டாங்க.. அதனால.. பிசிசிஐ செய்த காரியம்!

சோயிப் அக்தர் கொடுத்த ஐடியா

சோயிப் அக்தர் கொடுத்த ஐடியா

முன்னதாக சோயப் அக்தர் பிடிஐக்கு அளித்த ஒரு பேட்டியில், மூடிய அரங்கில் இந்தியா -பாகிஸ்தான் போட்டிகளை நடத்தலாம். இதில் கூட்டாக நிதி வசூலிக்கலாம். இந்த நிதியை இரு நாடுகளும் சமமாக பிரித்து பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார். இதுகுறித்து கபில் தேவ் கூறுகையில், இது சாத்தியமில்லாதது. அவருக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு. ஆனால் அந்தப் பணம் நமக்குத் தேவையில்லை. நம்மிடம் நிறைய பணம் இருக்கிறது. மக்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டியதுதான் இப்போது முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.

புகார் சொல்லாதீங்க

புகார் சொல்லாதீங்க

ஆனால் இப்போது ஒருவர் மாற்றி ஒருவர் மற்றவர் மீது அரசியல் ரீதியாக புகார் சொல்லி வருவதை டிவிகளில் காண முடிகிறது. அதை முதலில் நிறுத்த வேண்டும். அதுவே போதுமானது. மக்கள் உயிர் முக்கியம். பிசிசிஐ ஏற்கனவே ரூ. 51 கோடி நிதியுதவி அளித்துள்ளது. தேவைப்பட்டால் இன்னும் கூட அது கொடுக்கம். தற்போது நிதி வசூலிக்க வேண்டிய அவசியம் வரவில்லை என்றும் கபில்தேவ் கூறியுள்ளார்.

இன்னும் மோசமாகும்

இன்னும் மோசமாகும்

நிலைமை மேலும் மோசமாகும் என்று சொல்கிறார்கள். அப்படி நேரும்பட்சத்தில் மக்களின் உயிரைப் பணயம் வைக்க முடியாது. வீரர்களின் உயிரையும் பணயம் வைக்க முடியாது. குறைந்தது அடுத்த 6 மாதங்களுக்கு கிரிக்கெட் ஆடாமல் இருப்பதே நல்லது. அது அவசியமும் கூட. 3 போட்டிகளை நடத்தி எவ்வளவு பணத்தை வசூலித்து விட முடியும். எனவே இந்த ஐடியா சாத்தியமில்லாதது என்றார் கபில் தேவ்.

மண்டேலா கஷ்டப்பட்டதை விடவா

மண்டேலா கஷ்டப்பட்டதை விடவா

தற்போதைய லாக்டவுன் குறித்த ஒரு கேள்விக்கு, நெல்சன் மண்டேலா 27 வருடம் தனிமைச் சிறையில் இருந்தார். அத்தோடு ஒப்பிடுகையில், இதெல்லாம் ஒரு லாக்டவுனே அல்ல. எல்லா வசதியும் நமக்குக் கிடைக்கவே செய்கிறது. அவர் கஷ்டப்பட்டதை விடவா நாம் கஷ்டப்பட்டு விட்டோம். இது நமது நல்லதுக்குத்தானே. எனவே இந்த சிரமத்தை மக்கள் பொருட்படுத்தக் கூடாது என்றார் கபில் தேவ்.

Story first published: Thursday, April 9, 2020, 17:12 [IST]
Other articles published on Apr 9, 2020
English summary
Former captain Kapil Dev said 3 matches between India -Paskistan not feasible at this moment
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X