அதை 50% செய்தால் கூட பெரிய விஷயம்.. சச்சின் மகனுக்கு கபில் தேவ் முக்கிய அட்வைஸ்.. நிறைவேற்றுவாரா??

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனுக்கு கபில் தேவ் முக்கிய அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார்.

Sachin Tendulkar மகன் Arjun-க்கு Kapil Dev முக்கிய Advice | #Cricket

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இந்தாண்டு படு மோசமாக சொதப்பியது.

14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

ரத்தாகும் நிலையில் இந்தியா - தென்னாப்பிரிக்க டி20 போட்டி.. பிசிசிஐ போட்ட அவசர மீட்டிங்.. காரணம் என்ன ரத்தாகும் நிலையில் இந்தியா - தென்னாப்பிரிக்க டி20 போட்டி.. பிசிசிஐ போட்ட அவசர மீட்டிங்.. காரணம் என்ன

மும்பையின் செயல்

மும்பையின் செயல்

ப்ளே ஆஃப் செல்ல முடியாது என்று உறுதியான பிறகு மும்பை அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. ஆனால் பெரிது ம் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. ஒருமுறையாவது அந்த இளம் ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு தரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் ஏமாற்றமே மிஞ்சியது.

பயிற்சியாளரின் விளக்கம்

பயிற்சியாளரின் விளக்கம்

அர்ஜுன் டெண்டுல்கர் தனது பந்துவீச்சில் இன்னும் சில முன்னேற்றங்களை காண வேண்டும். இதனை வலைப்பயிற்சியில் பார்த்ததால் தான் வாய்ப்பு தரப்படவில்லை என அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் தெரிவித்திருந்தார். இதனை ரசிகர்களும் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

கபில் தேவ்-ன் அட்வைஸ்

கபில் தேவ்-ன் அட்வைஸ்

இந்நிலையில் அர்ஜுனுக்கு கபில் தேவ் முக்கிய அட்வைஸை கூறியுள்ளார். அதில், டெண்டுல்கர் எனும் பெயர் தனது பெயருடன் வருவதால் அர்ஜுன் அழுத்தம் அடைகிறார். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர் சுதந்திரமாக செயல்பட முயற்சிக்க வேண்டும். சச்சின் மகன் என்பதை மறந்துவிடுங்கள். சுதந்திரமாக அர்ஜுனை செயல்பட விடுங்கள் என கபில் தேவ் கூறியுள்ளார்.

50 சதவீதம் போதும்

50 சதவீதம் போதும்

தொடர்ந்து பேசிய அவர், டான் பிராட்மேனின் மகன், அழுத்தம் காரணமாக தனது பெயரை மாற்றிக்கொண்டார். அவருக்கும் இதே அழுத்தம் தான் இருந்தது. எனவே இதை அர்ஜுன் சரி செய்தாக வேண்டும். சச்சினின் மகன் என்பதால் அவரை விட இரு மடங்கு சாதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் தந்தையின் சாதனையில் 50 சதவீதத்தை செய்தால் கூட அர்ஜுன் டெண்டுல்கருக்கு மிகப்பெரிய சாதனையாகும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Kapil dev shares a valuable note to arjun tendulkar
Story first published: Saturday, June 4, 2022, 19:47 [IST]
Other articles published on Jun 4, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X