For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிறந்த நாள் கொண்டாடும் உலக கோப்பை நாயகன்... குவிந்த வாழ்த்துக்கள்

சண்டிகர் : கடந்த 1983ல் இந்திய அணியை வழிநடத்தி உலக கோப்பையை இந்தியாவிற்கு பரிசளித்த முன்னாள் கேப்டன் கபில்தேவின் 61வது பிறந்ததினம் இன்று.

இந்த நாளில் முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துமழையை பொழிந்து வருகின்றனர்.

கபில்தேவ் குறித்த பாலிவுட் படமான '83'ல் நடித்துவரும் ரன்வீர் சிங்கும் படத்தின் சில போஸ்டர்களை வெளியிட்டு கபில்தேவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

1978 முதல் 1994 வரை

1978 முதல் 1994 வரை

இந்தியாவின் ஆல்-ரவுண்டராக இருந்த கபில்தேவ், கடந்த 1978ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் போட்டியை கட்டாவில் துவங்கினார். ஹரியானா ஹரிக்கேன் என்று புகழப்படும் கபில்தேவ் 1994 வரை கிரிக்கெட்டில் கோலோச்சினார்.

கபில்தேவிற்கு வயது 61

கபில்தேவிற்கு வயது 61

கடந்த 1983ல் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் தன்னுடைய 61வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

வாழ்த்து மழையில் நனைந்த கபில்

வாழ்த்து மழையில் நனைந்த கபில்

கபில் தேவின் 61வது பிறந்ததினத்தையொட்டி முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், பாலிவுட் நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் சமூகவலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மிகச் சிறந்த வீரர் என புகழாரம்

கபில்தேவின் சமகால வீரர் பிஷன் சிங் பேடி, கபில் தேவிற்கான பிறந்த நாள் வாழ்த்துக்களை டிவிட்டர் மூலம் முதலில் பதிவு செய்தார். கபில்தேவ் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்று அவர் புகழாரம் சூட்டினார்.

விவிஎஸ் லக்ஷ்மன், முகமது கையிப் வாழ்த்து

தொடர்ந்து முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் வாழ்த்துக்களை பதிவு செய்துவரும் நிலையில், விவிஎஸ் லக்ஷ்மன், முகமது கையிப் உள்ளிட்டவர்கள் கபில்தேவுடன் தாங்கள் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்தனர். ஷிகர் தவான், ஹர்பஜன் சிங் உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

"மகிழ்ச்சியை பரிசளித்தவர் கபில்"

காங்கிரஸ் கட்சியின் தலைவரும் திருவனந்தபுரத்தின் எம்.பி.யுமான சசி தரூரும் கபில் தேவிற்கு தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தான் விளையாடும் போதெல்லாம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தவர் கபில் என்று அவர் கூறியுள்ளார்.

சிறந்த ஆல்-ரவுண்டர் என பெருமிதம்

இதனிடையே சிறந்த ஆல்-ரவுண்டர் கபில் தேவ் என குறிப்பிட்டு பிசிசிஐ-ம் தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.

கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படம்

இதனிடையே கபில்தேவின் வாழ்க்கை வரலாற்று படமான '83'ல் கபில்தேவாக நடித்துவரும் ரன்வீர் சிங்கும் கபில்தேவின் பிறந்தநாளையொட்டி படத்தின் சில படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, January 6, 2020, 16:52 [IST]
Other articles published on Jan 6, 2020
English summary
Kapil dev turns 61 and poured with Birthday wishes
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X