For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்பிக்கையோட ஆரம்பிச்ச கேப்டன்... அதிரடியா அவுட்டாக்கிய இளம் பௌலர்... கைவிட்ட வெற்றி!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 28வது போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

இதில் சிறப்பான போட்டியை அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வெற்றி கொண்டுள்ளது.

இந்த போட்டியின்மூலம் இந்த தொடரில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பௌலர் கார்த்திக் தியாகி எடுத்துள்ள முதல் விக்கெட்டே கேன் வில்லியம்சனின் விக்கெட்.

ஒரு பவுலர விடல... ருத்ர தாண்டவம் ஆடிய பட்லர்.. சிக்கி திணறிய ஐதராபாத்.. இமாலய இலக்கு நிர்ணயம்!ஒரு பவுலர விடல... ருத்ர தாண்டவம் ஆடிய பட்லர்.. சிக்கி திணறிய ஐதராபாத்.. இமாலய இலக்கு நிர்ணயம்!

ராஜஸ்தான் அதிரடி

ராஜஸ்தான் அதிரடி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய நிலையில், போட்டியின் துவக்கம் முதலே ராஜஸ்தான் அணி அதிரடி காட்டியது. அந்த அணியின் பேட்டிங்கும் பௌலிங்கும் இன்றைய போட்டியில் சிறப்பாக அமைந்திருந்தது.

பீல்டிங் தேர்வு

பீல்டிங் தேர்வு

இந்த போட்டியில் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்த சன்ரைசர்ஸ் பௌலிங் மற்றும் பீல்டிங் இரண்டிலும் சொதப்பியது. ராஜஸ்தான் வீரர்களை அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்ப வேண்டிய அந்த அணி, மாறாக கேட்ச் மிஸ், பீல்டிங் மிஸ் என தொடர்ந்து சொதப்பலான பௌலிங்கை வெளிப்படுத்தியது.

கேப்டன் மாற்றம் போதாது

கேப்டன் மாற்றம் போதாது

தொடர்ந்து பேட்டிங்கிலும் அந்த அணி சிறப்பான போட்டியை வெளிப்படுத்தவில்லை. அணியின் பாண்டே மற்றும் பேர்ஸ்டோ மட்டுமே 30 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தனர். மாறாக மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. கேப்டனை மாற்றினால் மட்டும் போதாது என்பதையே அந்த அணியின் இன்றைய போட்டி காட்டியது.

124 ரன்கள் குவிப்பு

124 ரன்கள் குவிப்பு

மாறாக முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் 124 ரன்களை அதிரடியாக குவித்திருந்தார். கேப்டன் சஞ்சு சாம்சனும் சிறப்பாக விளையாடி 48 ரன்களை அடித்தார். இதையடுத்து அந்த அணியின் ஸ்கோர் 220ஆக உயர்ந்தது. மேலும் அந்த அணியின் பௌலிங்கும் சிறப்பாக அமைந்திருந்தது. இதையடுத்து அந்த அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

வீழ்த்திய கார்த்திக் தியாகி

வீழ்த்திய கார்த்திக் தியாகி

குறிப்பாக அந்த அணியின் கார்த்திக் தியாகி தன்னுடைய முதல் போட்டியில் விளையாடி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து கேப்டன் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் நெட் பௌலராக இருந்த அவர் காயம் காரணமாக வெளியேறி தற்போது தனது பார்மை நிரூபித்துள்ளார்.

Story first published: Sunday, May 2, 2021, 20:17 [IST]
Other articles published on May 2, 2021
English summary
The first wicket for Karthik Tyagi in #IPL2021 is Kane Williamson
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X