ஆளு தான் 6 அடி.. செஞ்ச வேலை அப்படி இல்ல... கெயில் ஜேமிசனின் சிறுபிள்ளை தனம்...கலாய்க்கும் ரசிகர்கள்!

நியூசிலாந்து: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது பாத்ரூமில் ஒளிந்துக்கொண்டதாக கெயில் ஜேமிசன் தெரிவித்துள்ளது வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை வென்றது.

இதனையடுத்து கோப்பையை நியூசிலாந்துக்கு எடுத்துச்சென்ற வீரர்கள் வெற்றியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இறுதி நாள்

இறுதி நாள்

இந்த போட்டியின் கடைசி நாளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 53 ஓவர்களில் 139 ரன்கள் எடுக்க இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஓபனர்கள் டேவன் கான்வே, டாம் லதாம் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு நம்பிக்கை பிறந்தது. இதனால் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

கெயில் ஜேமிசன்

கெயில் ஜேமிசன்

இந்த பரபரப்பு சமயத்தில், தனது பதற்றத்தைத் தணிக்க பாத்ரூமில் ஒளிந்துக்கொண்டதாக கெயில் ஜேமிசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஜேமிசன், நாங்கள் அறைக்குள் அமர்ந்து தொலைக்காட்சியில் போட்டியை பார்த்து வந்தோம். நேரில் பார்ப்பதைவிட தொலைக்காட்சியில் தாமதமாக இருந்தது.

பதற்றமான சூழல்

பதற்றமான சூழல்

இந்திய அணி ரசிகர்கள் ஒவ்வொரு பந்துக்கும் சப்தங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதனால், ஒவ்வொரு தடுப்பாட்டம் அல்லது சிங்கிளே எடுத்தால் கூட விக்கெட் வீழ்ந்தது போன்று பெரும் ஆரவாரம் செய்தனர். ரசிகர்களின் சத்தத்தினாலும், தொலைக்காட்சியில் தாமதமாக ஒளிபரபரப்பு ஆனதினாலும் எனக்கு பதற்றம் அதிகரித்தது. இதனால் போட்டி குறித்து எதுவும் தெரிய வேண்டும் என முடிவு செய்து,

பாத்ரூமில் மறைவு

பாத்ரூமில் மறைவு

இதனையடுத்து எந்தவித சப்தமும் இல்லாத இடத்திற்கு செல்ல முடிவெடுத்தேன். அதன்படி பாத்ரூமில் போய் ஒளிந்துகொண்டு பதற்றத்தைத் தவிர்க்க முயன்றேன். எங்கள் அணியின் சிறந்த வீரர்களான பேட்ஸ்மேன்கள் வில்லியம்சன், டெய்லர் இருவரும் பதற்றமில்லாமல் விளையாடி, அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள். அதன்பிறகுதான் நிம்மதியாக இருந்தது.

ஆட்ட நாயகன் விருது

ஆட்ட நாயகன் விருது

இந்த போட்டியில் பந்துவீச்சாளர் கெயில் ஜேமிசன் தான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்து இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த ஜேமிசன், 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஜேமிசனின் பந்துவீச்சுதான் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Kayle Jamieson Revealed that he hid in the Bathroom to escape from the tension while Newzealand run chase
Story first published: Tuesday, June 29, 2021, 22:50 [IST]
Other articles published on Jun 29, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X