கிரிக்கெட் விளையாடும் போதே மரணம் அடைந்த கேரளா வீரர்.. அதிர்ச்சி வீடியோ

காசர்கோடு: கேரளாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் 20 வயது வீரர் ஒருவர் விளையாடும் போதே மாரடைப்பு வந்து மரணம் அடைந்து இருக்கிறார். தற்போது இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

பத்மநாப் என்ற அந்த வீரர் பந்து வீச தயாராகும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் மிகவும் திறமையான பந்துவீச்சாளர் என்று அவர் நண்பர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த உடனே அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே அவர் மரணம் அடைந்துள்ளார்.

கேரளாவில் நடந்த போட்டி

கேரளாவில் நடந்த போட்டி

கேரளாவின் காசர்கோட்டி நேற்று கேரளா கிரிக்கெட் சங்கம் சார்பாக உள்ளுர் போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காசர்கோட்டை சேர்ந்த பத்மநாப் என்ற வீரர் பந்து வீச வந்து இருக்கிறார். பந்து வீசும் எல்லையில் இருந்து வேகமாக ஓடி வந்த அவர் பாதியில் கீழே விழுந்து இருக்கிறார்.

மருத்துவ உதவி

அவர் கீழே விழுந்தவுடன் அணியின் பயிற்சியாளர் வந்து அவரை சோதனை செய்து இருக்கிறார். வெயிலில் மயங்கி விழுந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது என முதலில் அவருக்கு முதல் உதவி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதன்பின்பும் அவர் சரியாகவில்லை என்றதும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். அவர் கிரிக்கெட் விளையாடும் போது கீழே விழும் சம்பவம் வீடியோவாக வெளியாகி இருக்கிறது.

மரணம் அடைந்துவிட்டார்

மரணம் அடைந்துவிட்டார்

அவர் உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார். மைதானத்திலேயே அவர் மரணம் அடைந்து இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தற்போது பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.

மீண்டும் நடக்கிறது

மீண்டும் நடக்கிறது

இந்தியாவில் ஏற்கனவே இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்கிறது. 2015ல் அங்கி கேசரி என்ற வீரர் பெங்காலில் நடந்த போட்டியில் சக வீரரிடம் எதிர்பாராத விதமாக மோதி மரணம் அடைந்தார். அதேபோல் 2014ல் ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ் தலையில் பந்துபட்டு மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Kerala Cricket player died while playing by Cardiac arrest. The player named Padmanap, 20 died while bowling.
Story first published: Sunday, December 17, 2017, 14:09 [IST]
Other articles published on Dec 17, 2017
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X