For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

'கோலி vs ரஹானே'.. குட்டையை குழப்பும் பீட்டர்சன் - அசராமல் அடிக்குமா இந்தியா?

மும்பை: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கோலி, ரஹானே இடையேயான போக்கு தான் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், கோலி தலைமையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு, ரஹானே தலைமையில் எழுச்சிப் பெற்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றதை சரித்திரம் என்றும் மறக்காது.

அதுவும், முன்னணி வீரர்கள் பலர் காயத்தால் வெளியேறிய நிலையிலும், சுத்தமாக அனுபவமே இல்லாத, ஏன் குறைந்தபட்சம் ஆஸி., மண்ணை கூட மிதிக்காத இந்திய வீரர்களைக் கொண்டு ஆஸி., எனும் கொம்பனை உள்ளூரிலேயே வைத்து தட்டித் தூக்கினார் ரஹானே.

இவங்களை டீமில் எடுங்க.. இங்கிலாந்து டீம் வாலாட்ட கூட முடியாது..கோலி நம்பிக்கை வைக்கும் இளம் புலிகள் இவங்களை டீமில் எடுங்க.. இங்கிலாந்து டீம் வாலாட்ட கூட முடியாது..கோலி நம்பிக்கை வைக்கும் இளம் புலிகள்

இந்த நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், இந்தத் தொடரில் கோலி - ரஹானே இடையேயான விஷயங்கள் தான் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கப் போகிறது என்று கூறியிருக்கிறார்.

 கோலி vs ரஹானே

கோலி vs ரஹானே

"ஒரு கேப்டனாக ஆஸி., அணியை 'கண்ணு வேர்க்குது' மொமெண்ட்டில் ஒவ்வொரு போட்டியிலும் கலங்க வைத்த ரஹானே, இப்போது இந்தியா வந்த பிறகு, கோலி தலைமையில் விளையாடப் போகிறார். இந்த தொடர் முழுவதும் இது மிகவும் சுவாரஸ்யமான மோதலாக இருக்கப் போகிறது.

 ஆர்ச்சர் vs புஜாரா?

ஆர்ச்சர் vs புஜாரா?

காயத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டார் பும்ரா. ஆஸி., பவுலர்களுக்கு கடும் குடைச்சல் கொடுத்த புஜாராவுக்கு சவால் தருவாரா ஆர்ச்சர்? இப்படியாக இந்த தொடர் முழுவதும் பல permutations இருக்கலாம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு வெற்றி கேப்டனாக திரும்பிய ரஹானே, மீண்டும் துணை கேப்டனாக கோலி தலைமையில் விளையாடுவதை காண்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

 100% இந்தியாவுக்கு சாதகம்

100% இந்தியாவுக்கு சாதகம்

இத்தொடரில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பர்ன்ஸ் அணிக்கு திரும்பினாலும், இந்தியாவுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம். உள்ளூரில் அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். நிச்சயம் வச்சு செய்வார்கள். முதல் இரு டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து தனது சிறந்த அணியை தேர்வு செய்யவில்லை. ஆகையால், 100 சதவிகிதம் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது" என்று கூறியிருக்கிறார்.

 கல் எரிந்து பார்க்கும் பீட்டர்சன்

கல் எரிந்து பார்க்கும் பீட்டர்சன்

இந்தியா - இங்கிலாந்து தொடருக்கு மன ரீதியாக இந்திய வீரர்கள் தயாராகிக் கொண்டிருக்கும் சூழலில், கோலி vs ரஹானே என்று பேசி மிக அற்புதமாக ஒரு குட்டையை குழப்பும் ஸ்டிராடஜியை கையில் எடுத்திருக்கிறார் கெவின் பீட்டர்சன். இந்தியாவின் இவ்விரு முக்கிய வீரர்களும் இதுபோன்ற கருத்துகளை காதில் போட்டுக் கொள்ளாமல், தங்கள் பணியை மட்டும் செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Wednesday, February 3, 2021, 11:43 [IST]
Other articles published on Feb 3, 2021
English summary
kevin pietersen about kohli and rahane ind vs eng - Reports
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X