For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தைரியமா அவர் கையில் கொடுங்க.. கஷ்டப்பட மாட்டார்.. ஏத்தி விடும் பீட்டர்சன்.. தாங்குவாரா பட்லர்

லண்டன்: ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸிடம் கேப்டன் பொறுப்பை கொடுத்து அவரை நெருக்கடிக்குள்ளாக்குவதை விட பேசாமல் ஜோஸ் பட்லருக்கு கொடுக்கலாம் என்று முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

தற்போது இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோ ரூட் இருக்கிறார். அவர் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்குப் பதில் ஜோஸ் பட்லரை கேப்டனாக்கலாமே என்று யோசனை தெரிவித்துள்ளார் பீட்டர்சன்.

ஜூலை 8ம் தேதி முதல் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் ரூட் விளையாடாத காரணத்தால் யார் கேப்டன் என்ற கேள்வி எழுந்தது. அந்த பொறுப்புக்குத்தான் பட்லரை பரிந்துரைத்துள்ளார் பீட்டர்சன்.

எப்பவும் உம்முன்னு இருந்தா இப்படித்தான்.. முன்னாள் வீரரை செமயாக கலாய்த்து விட்ட யுவராஜ் சிங்!எப்பவும் உம்முன்னு இருந்தா இப்படித்தான்.. முன்னாள் வீரரை செமயாக கலாய்த்து விட்ட யுவராஜ் சிங்!

பீட்டர்சன் யோசனை

பீட்டர்சன் யோசனை

இதுகுறித்து பீட்டர்சன் கூறுகையில், பென் ஸ்டோக்ஸ் சரியாக இருப்பாரா என்று கேட்டால் நிச்சயம் இருக்க மாட்டார். காரணம் அவரிடம் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டால் அவருக்கு சுமை கூடிவிடும். நெருக்கடி வரும். அவரது பேட்டிங் பாதிக்கப்படும். என்னைக் கேட்டால் ஜோஸ் பட்லர் சரியாக இருப்பார். அவர்தான் எனது சாய்ஸ் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டோக்ஸ் சரிப்பட மாட்டார்

ஸ்டோக்ஸ் சரிப்பட மாட்டார்

ஏற்கனவே ஸ்டோக்ஸுக்கு நிறைய நெருக்கடிகள் உள்ளன. பொறுப்புகள் உள்ளன. கேப்டன் பொறுப்பையும் கொடுத்தால் அது கூடுதல் சுமையாகி விடும். காரணம் நீ இப்போது முதல் கேப்டன் என்று கூறி விட்டாலே, தானாகவே பல சுமைகள் வந்து தலையில் ஏறி விடும். அது டோட்டலாக அந்த வீரரின் இயல்பை பாதித்து விடும். எனவே அதைக் கொடுக்கக் கூடாது. ஜோஸ் பட்லரிடம் இப்பொறுப்பை விட்டால் அவர் அழகாக செய்வார் என்றும் பீட்டர்சன் கூறியுள்ளார்.

எனக்குப் பிடிக்கலை

எனக்குப் பிடிக்கலை

என்னைப் பொறுத்தவரை கேப்டன் பொறுப்பையே வெறுப்பவன் நான். அது நமது இயல்பை காலி செய்து விடும். நான் நிறையப் போராடியுள்ளேன். எனக்கு அது சுத்தமாக பிடிக்கவே இல்லை. நீங்கள் நிறைய மாற வேண்டியிருக்கும். நீங்கள் நீங்களாகவே இருக்க முடியாது. நிறைய திட்டமிட வேண்டும், நிறைய பேச வேண்டும்.. நிறைய மாற வேண்டும். அது எனக்கெல்லாம் சரிப்பட்டு வராது என்றார் பீட்டர்சன்.

ரூட்டுக்குப் பிடிச்ச தல!

ரூட்டுக்குப் பிடிச்ச தல!

ஆனால் ரூட் என்ன நினைக்கிறார் தெரியுமா.. தனக்கு அடுத்து நல்ல கேப்டனாக வரக் கூடிய தகுதி பென் ஸ்டோக்ஸுக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஸ்டோக்ஸ் அருமையான வீரர், நல்ல கேப்டனாக திகழக் கூடிய தகுதி உடையவர். அவர் துணை கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுள்ளார். முன்னுதாரணமாக திகழ்கிறார். எனவே அவரை கேப்டனாக்கலாம் என்பது ரூட்டின் கருத்தாகும்.

ஆமா, இங்கிலாந்தில் கொரோனா செத்துப் போய்ருச்சா.. கிரிக்கெட்டெல்லாம் விளையாடப் போறாங்களே!

Story first published: Tuesday, June 9, 2020, 19:07 [IST]
Other articles published on Jun 9, 2020
English summary
Kevin Pietersen backed wicketkeeper-batsman Jos Buttler for the England's Captaincy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X