For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இஷாந்த் வேல்யூ இந்தியாவுக்கு தெரியல.. கெவின் பீட்டர்சன் தடாலடி ட்வீட்

சென்னை: இந்திய அணியில் ஒரு 'கொண்டாடப்படாத ஹீரோ' இஷாந்த் ஷர்மா என்று கெவின் பீட்டர்சன் புகழ்ந்துள்ளார்.

இஷாந்த் ஷர்மாவின் aggressive என்பது கடந்த 10 வருட காலக்கட்டத்தில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு தெரியாது. எப்போதும் அவரிடம் இன்டென்ட் பெரிதாக இருக்காது. ஆனால், ரிதம் பிடித்துவிட்டால் பின்னிவிடுவார்.

13 வருடங்களாக இந்திய அணியில் விளையாடி வந்தாலும், இன்கன்சிஸ்டன்சி, காயம் போன்றவை தான் இஷாந்தின் வில்லன்களாக அமைந்தன

 பக்கா லைன் அண்ட் லெந்த்

பக்கா லைன் அண்ட் லெந்த்

2007ல் CB சீரிஸில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணிக்கு தோனி கேப்டன். இஷாந்த் அணியில் இடம் பிடித்திருந்தார். நீங்க நம்பமாட்டீங்க... அந்த தொடர் முழுவதும் தனது லைன் அண்ட் லெந்த்தில் 100 சதவிகிதம் துல்லியமாக வீசினார் இஷாந்த்.

 கண்ணீர் விட்ட பாண்டிங்

கண்ணீர் விட்ட பாண்டிங்

லெஃப்ட் ஹேண்டர் மேத்யூ ஹைடன், இஷாந்தின் பந்தை தொடவே அவ்வளவு யோசிக்க தயங்கிய கண்கொள்ளா காட்சிகளை காண ஆயிரம் கண்கள் தேவை. குறிப்பாக, பெர்த் டெஸ்ட் போட்டியில் பாண்டிங்கை கலங்க வைத்த பெருமை இஷாந்தையே சாரும்.

 அடுத்தடுத்த பந்துகளில்

அடுத்தடுத்த பந்துகளில்

இந்நிலையில், இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் இறுதித் தருவாயில், அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் ஸ்டெம்ப்புகளை அடுத்தடுத்த பந்துகளில் பறக்கவிட்டார் இஷாந்த். இதனால் தான் இங்கிலாந்து 600 ரன்களுக்குள் அடங்கியது.

 Unsung Hero

Unsung Hero

இஷாந்தின் பந்துவீச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், "இஷாந்தின் அட்டகாசமான ஸ்பெல் இது. இது கண்டிப்பாக அருமையான ஓவர் என்று நான் கூறுவேன். இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வரும் இஷாந்த், ஒரு கொண்டாடப்படாத ஹீரோ. ஒரு வேகப்பந்து வீச்சாளராக இது மிகவும் பாராட்டத்தக்கது" என்று பதிவிட்டுள்ளார்.

Story first published: Sunday, February 7, 2021, 12:40 [IST]
Other articles published on Feb 7, 2021
English summary
Kevin Pietersen tweet makes Indians happy - இஷாந்த் ஷர்மா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X