For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மஜாப்பா.. மஜாப்பா.. இப்படியே விளையாடுப்பா.. இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய இங்கிலாந்து ஜாம்பவான்!

டெல்லி: ராஐஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் இந்திய வீரரான சஞ்சு சாம்சனின் ஆட்டத்தை நேசிப்பதாகவும், வியப்பதாகவும் இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகள் நல்ல இளம் இந்திய வீரர்களை அடையாளம் காணும் எந்திரமாக செயல்பட்டு வருகிறது.

ரிஷப் பௌலர்களோட கேப்டன்... தோனியோட பாராட்டு சிலிர்ப்ப ஏற்படுத்துச்சு... இளம் வீரர் நெகிழ்ச்சி ரிஷப் பௌலர்களோட கேப்டன்... தோனியோட பாராட்டு சிலிர்ப்ப ஏற்படுத்துச்சு... இளம் வீரர் நெகிழ்ச்சி

இந்த ஐ.பி.எல் தொடரில் இந்திய வீரர்கள் நிதிஷ் ராணா, சஞ்சு சாம்சன், ருத்ராஜ் கெய்க்வாட், சேத்தன் சாகாரியா உள்பட பல இந்திய இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

சஞ்சு சாம்சன் அதிரடி சதம்

சஞ்சு சாம்சன் அதிரடி சதம்

குறிப்பாக ராஐஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான கேரளாவை சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் பட்டையை கிளப்பி வருகிறார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நூலிழையில் வெற்றியை தவற விட்டது. ஆனால் அந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் அதிரடி சதத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

மறக்க முடியாத ஆட்டம்

மறக்க முடியாத ஆட்டம்

63 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன். ராஜஸ்தான் தோல்வியை தழுவினாலும் சஞ்சு சாம்சன் ஆட்டத்தை வியந்து பாராட்டாதவர்களே கிடையாது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனும் சஞ்சு சாம்சன் ஆட்டத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

புகழ்ந்து தள்ளிய பீட்டர்சன்

புகழ்ந்து தள்ளிய பீட்டர்சன்

இது தொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறியதாவது:- நான் ஒவ்வொரு ஆண்டும் சஞ்சு சாம்சனை நேசிக்கிறேன். அவர் விளையாடும் விதம் மற்றும் அவர் ஷாட்களை தேர்ந்தெடுக்கும் விதம் குறித்து நான் முற்றிலும் பிரமிக்கிறேன். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான அவரது சதம் மிகவும் அற்புதமானது. ஆனால் வெற்றிக் காற்று அவர் பக்கம் வராமல் இருப்பது மிகவும் துரதிருஷ்டமானது.

சுமையை தாங்குகிறார்

சுமையை தாங்குகிறார்

சஞ்சு சாம்சன் இப்போது ராஐஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் என்பதால் அவரது பொறுப்புகள் மற்றொரு நிலைக்குச் செல்கின்றன. கேப்டனாக இருக்கும்போது நீங்கள் உங்களைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்குகிறீர்கள். எனவே சஞ்சு சாம்சன் பேட்டிங் வரிசையில் பென் ஸ்டோக்ஸ் விட்டுச்சென்ற சுமையையும் சுமக்க வேண்டியதுள்ளது என்று கெவின் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 22, 2021, 19:44 [IST]
Other articles published on Apr 22, 2021
English summary
Former England cricketer Kevin Pietersen has said that he loves and admires the performance of Royals Royals captain Sanju Samson
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X