For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வயசானாலும் கெத்து குறையாத பீட்டர்சன்... 17 பந்துகள்ல 42 ரன்கள்.. பறந்து பறந்து அடித்து அதிரடி!

ராய்ப்பூர் : நேற்றைய தினம் இங்கிலாந்து ஜாம்பவான்கள் மற்றும் வங்கதேச ஜாம்பவான்களுக்கிடையில் சாலை பாதுகாப்பு உலக தொடரின் போட்டி நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து ஜாம்பவான்கள் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல் இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல்

கேப்டன் கெவின் பீட்டர்சன் 17 பந்துகளில் 42 ரன்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்

சாலை பாதுகாப்பு வலியுறுத்தல்

சாலை பாதுகாப்பு வலியுறுத்தல்

சாலை பாதுகாப்பு டி20 தொடர் தற்போது ராய்ப்பூரின் ஷாகித் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சர்வதேச அளவில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும்வகையில் கடந்த ஆண்டு முதல் இந்த போட்டி நடத்தப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இந்த ஆண்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து ஜாம்பவான்கள் வெற்றி

இங்கிலாந்து ஜாம்பவான்கள் வெற்றி

இதில் இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட அணிகள் மோதி வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் இந்த தொடரில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச ஜாம்பவான்கள் அணி மோதின. இதில் கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து ஜாம்பவான்கள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கிறிஸ் ட்ரெம்லெட் சிறப்பு

கிறிஸ் ட்ரெம்லெட் சிறப்பு

முதலில் களமிறங்கி ஆடிய வங்கதேச அணி 113 ரன்களுக்கு சுருண்டது. போட்டியில் டாஸ் வென்ற பீட்டர்சன் பௌலிங்கை தேர்வு செய்த நிலையில், 7 பௌலர்களை கொண்டு வங்கதேச அணியை திணறடித்தார். அணியின் பௌலர் கிறிஸ் ட்ரெம்லெட் 10 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் ஸ்பின்னர் மான்டி பனேசரும் சிறப்பாக பந்து வீசினார்.

நிஜாமுதீன் குறைந்த ரன்கள்

நிஜாமுதீன் குறைந்த ரன்கள்

கடந்த போட்டியில் இந்தியாவுடன் மோதி தோல்வியடைந்த வங்கதேச ஜாம்பவான்கள் அணி தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 40 ரன்களை எடுத்த நிஜாமுதீன், நேற்றைய போட்டியில் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

17 பந்துகள்... 42 ரன்கள்

17 பந்துகள்... 42 ரன்கள்

இதையடுத்து 114 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இங்கிலாந்து ஜாம்பவான்கள் அணியின் கேப்டன் கெவின் பீட்டர்சன், 17 பந்துகளில் 42 ரன்களை எடுத்து அதிரடி காட்டினார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸ் அடக்கம். இதையடுத்து போட்டியின் நாயகனாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அந்த அணியின் டாரன் மாடி 32 ரன்களும் பில் மஸ்டர்ட் 27 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர்.

Story first published: Monday, March 8, 2021, 10:13 [IST]
Other articles published on Mar 8, 2021
English summary
Kevin Pietersen scored 42 off just 17 balls in Road Safety World Series
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X