For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சுனில் நரேன் சூப்பர்... தன்னை காப்பாற்றிய வீரருக்கு கேப்டனின் மனம்நிறைந்த பாராட்டு

அபுதாபி :சிஎஸ்கே உடனான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் கேகேஆர் அணியின் சுனில் நரேன், சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சனின் முக்கிய விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

இந்நிலையில் ஒவ்வொரு அணியிலும் முக்கிய வீரர்கள் இருப்பார்கள் என்றும் கேகேஆரின் முக்கிய வீரர் சுனில் நரேன் என்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் புகழ்ந்துள்ளார்.

13 வருட ஏக்கம்.. தலையில் கை வைத்த ஷாருக்.. தோனியை மிரள வைத்த தினேஷ் கார்த்திக்கின் மாஸ்டர் பிளான்!13 வருட ஏக்கம்.. தலையில் கை வைத்த ஷாருக்.. தோனியை மிரள வைத்த தினேஷ் கார்த்திக்கின் மாஸ்டர் பிளான்!

விமர்சனங்கள்.. நெருக்கடிகள்

விமர்சனங்கள்.. நெருக்கடிகள்

ஐபிஎல் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இதில் கேகேஆர் அணி சிறப்பான துவக்கத்தை தந்த நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் தோற்றதால் அந்த அணி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு அணியில் உள்ள இயான் மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

சிஎஸ்கேவிற்கு எதிராக வெற்றி

சிஎஸ்கேவிற்கு எதிராக வெற்றி

இதற்கு ஏற்றாற்போல கடந்த போட்டிகளில் தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப்பிலும் பேட்டிங்கிலும் சொதப்பினார். இந்நிலையில் சிஎஸ்கேவிற்கு எதிரான நேற்றைய ஐபிஎல்லின் 21வது போட்டியில் கேகேஆர் தன்னை நிரூபித்து 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தினேஷ் கார்த்திக்கிற்கும் பாராட்டு கிடைத்துள்ளது.

3வது இடத்தில் கேகேஆர்

3வது இடத்தில் கேகேஆர்

இதையடுத்து கேகேஆர் அணி ஐபிஎல் பட்டியலில் 3வது இடத்திற்கு ஆர்சிபியை முந்தி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக். ஒவ்வொரு அணியிலும் முக்கியமான வீரர்கள் இருப்பார்கள் என்றும் கேகேஆர் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் சுனில் நரேன் என்றும் தெரிவித்துள்ளார். 2 -3 போட்டிகளில் சரியாக விளையாடாதது பெரிய விஷயமில்லை என்றும் குறிப்பிட்டார்.

சுனில் நரேன் அபாரம்

சுனில் நரேன் அபாரம்

நேற்றைய போட்டியில் சுனில் நரேன், சிஎஸ்கேவின் முக்கிய வீரர் வாட்சனின் விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதேபோல திரிபாதி 51 பந்துகளில் 81 ரன்களை விளாசியுள்ளதற்கும் தினேஷ் கார்த்திக் பாராட்டு தெரிவித்துள்ளார். துவக்கத்தில் விளையாடிய வீரர்கள் சிறப்பாக விளையாடியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Story first published: Thursday, October 8, 2020, 20:36 [IST]
Other articles published on Oct 8, 2020
English summary
The way those guys batted at the start, they batted very well
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X