For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏம்பா பொல்லார்ட்! இது சின்னப்புள்ளத்தனமா இல்ல.. ரன் அடிக்க முடியலைனா இப்படியா பண்றது?

லக்னோ: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் கீரன் பொல்லார்ட், குறிப்பிட்ட நேரத்தில் பும்ராவை தடுக்க முயற்சி செய்தார். அது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று மிக மோசமாக பேட்டிங் செய்தது. ஒரு வீரர் கூட நிலைத்து நின்று ஆடவில்லை. பொல்லார்ட் இரண்டு டி20 போடிட்களிலும் எந்த வகையிலும் சிறப்பாக செயல்படவில்லை. இந்த நிலையில் அவர் சிறுபிள்ளைத்தனமாக செய்துள்ள காரியம் கிரிக்கெட் ரசிகர்களை கடுப்பேற்றி உள்ளது. அப்படி என்ன செய்தார்?

[யோ-யோ டெஸ்ட் வச்சு டீமை விட்டு தூக்குறது தப்பு.. எங்க காலத்துல இப்படியா இருந்துச்சு]

தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ்

தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ்

இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 195 ரன்கள் குவித்தது. மிகப் பெரிய இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ஓவர்கள் முடிவதற்குள் நான்கு விக்கெட்களை இழந்தது. தொடர்ந்து விக்கெட்கள் இழந்ததால், ரன் ரேட்டும் மிக குறைவாக இருந்தது.

கேட்ச் பிடிக்க வந்த பும்ரா

கேட்ச் பிடிக்க வந்த பும்ரா

ரன் அடிக்க வேண்டிய அழுத்தத்தில் இருந்த அந்த அணியின் கீரன் பொல்லார்ட் 11வது ஓவரில் பும்ரா வீசிய பந்தை தூக்கி அடித்தார். மேலே சென்ற பந்தை பும்ரா பிடிக்க ஓடி வந்தார். கேட்ச் பிடிக்க பும்ரா தன்னை நிலை நிறுத்திக் கொண்டு இருந்த போது, பொல்லார்ட் வேண்டுமென்றே அவர் அருகில் சென்று உரசினார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியவர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியவர்கள்

சரியாக கேட்ச் பிடிக்க ஒரு நொடி இருக்கும் முன் பொல்லார்ட்டின் கை பும்ராவின் கைகளை உரசிச் சென்றது. எனினும், பும்ரா இந்த சூழ்நிலையை சமாளித்து கேட்ச் பிடித்தார். கேட்ச் பிடித்த உடன் பும்ரா உட்பட இந்திய வீரர்கள் பொல்லார்டின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பும்ரா, பொல்லார்ட் இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இணைந்து ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார் கொடுத்திருக்க முடியும்

ஒருவேளை அந்த கேட்ச்சை பும்ரா பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தால், பொல்லார்ட் பீல்டிங்கை தடுத்தார் என அம்பயரிடம் இந்திய வீரர்கள் புகார் கொடுத்திருக்க முடியும். ஒரு பேட்ஸ்மேன் பீல்டிங்கை தடுத்தால், அந்த பேட்ஸ்மேன் ஆட்டமிழந்ததாக அம்பயர் அறிவிக்க முடியும்.

Story first published: Wednesday, November 7, 2018, 14:37 [IST]
Other articles published on Nov 7, 2018
English summary
Kieron Pollard distracted Bumrah while catching becomes controversy duing 2nd T20 at Lucknow
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X