'எந்த வீரரும் இப்படி செய்ய மாட்டார்..' டி காக் - நிறவெறி சர்ச்சை.. வெளுத்து வாங்கிய பொல்லார்ட்

துபாய்: நிறவெறிக்கு எதிராக "taking a knee"இல் ஈடுபட மறுத்த டி காக் தென்னாப்பிரிக்க அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் அவரது செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

கறுப்பின மக்களுக்கு ஆதரவாக மண்டியிட மறுத்த Quinton de K0ck.. ரசிகர்கள் கடும் விமர்சனம்

கடந்த ஆண்டு ஜார்ஜ் பிளாய்டு என்ற அமெரிக்கக் கறுப்பின இளைஞர் போலீஸ் அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது முதலே கறுப்பின மக்கள் மீதான வன்முறைக்கு எதிராக 'Black Lives Matter'பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

விளையாட்டு வீரர்கள் களத்தில் "taking a knee", அதாவது முட்டி போட்டு இனவெறிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள். புட்பால், கால்பந்து என பல விளையாட்டுகளிலும் வீரர்கள் இனவெறிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை இப்படிப் பதிவு செய்து வருகின்றனர்.

நிறவெறிக்கு எதிராக மண்டியிட மறுத்த டி காக், டீமில் இருந்து நீக்கம்? தெ.ஆப்ரிக்க கேப்டன் பரபர பேட்டி!நிறவெறிக்கு எதிராக மண்டியிட மறுத்த டி காக், டீமில் இருந்து நீக்கம்? தெ.ஆப்ரிக்க கேப்டன் பரபர பேட்டி!

எதிர்ப்பு

எதிர்ப்பு

அதேபோல உலகக் கோப்பை டி20 தொடரிலும் அனைத்து அணி வீரர்களும் முட்டி போட்டு இனவெறிக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வேண்டும் என ஐசிசி பரிந்துரை அளித்திருந்தது. அதன்படி போட்டி தொடங்கும் முன் அனைத்து வீரர்களும் களத்தில் முட்டி போட்டு இனவெறிக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்திய வீரர்களும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இப்படி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

Black Lives Matter

Black Lives Matter

இந்தச் சூழலில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சில தென் ஆப்பிரிக்க வீரர்கள் முட்டி போட மறுத்துவிட்டனர். இதையடுத்து அனைத்து வீரர்களும் Black Lives Matter இயக்கத்திற்கு ஆதரவாக முட்டி போட வேண்டும் என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இதற்கு மறுத்ததால் தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான டி காக், அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

டி காக் நீக்கம்

டி காக் நீக்கம்

"taking a knee" பிரசாரத்திற்கு ஆதரவாக முட்டி போட மறுத்ததாலேயே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் டி காக் நீக்கப்பட்டுள்ளார். அடுத்து வரும் போட்டிகளிலும் டி காக் பங்கேற்பாரா இல்லையா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் இல்லை. டி காக் நம்பிக்கைகளை மதிப்பதாகவும் அவருக்கு அணி எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும் தென்னாப்பிரிக்க கேபட்ன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

பொல்லார்ட் சாடல்

பொல்லார்ட் சாடல்

அதேநேரம் டி காக்கின் இந்த செயலுக்கு கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், டி காக்கின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை அனைவரும் அறிவீர்கள். அணியாக, மக்களாக எங்கள் நிலைப்பாடு (நிறவெறிக்கு எதிராகக் குரல் கொடுப்பது) இது தான். அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்.

கல்வி முக்கியம்

கல்வி முக்கியம்

ஒவ்வொருவருக்கும் இந்த விவகாரத்தில் கருத்துகள் உள்ளன. இதில் நான் எப்போதும் கூறுவது ஒன்று தான். இந்த பிரச்சினையைப் புரிந்துகொள்ளும் அனைவரும் இதற்குக் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள். இதைத்தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன். அதேநேரம் இது பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கல்விக்கும் முக்கிய பங்கு உள்ளது என்றே நான் நினைக்கிறேன்.

பரிதாபப்பட்டு செய்யத் தேவையில்லை

பரிதாபப்பட்டு செய்யத் தேவையில்லை

யாரும் இதனை எங்கள் மீது பரிதாபப்பட்டோ அல்லது வருத்தும் தெரிவிக்கும் வகையிலேயோ செய்யத் தேவையில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. அதனால் இது குறித்து இப்போது என்னால் எதுவும் கூற முடியாது. அதேநேரம் இதில் ஒரு தெளிவான பொருள் கிடைத்தவுடன் டி காக்கைப் பற்றி என்னால் மேலும் கருத்து தெரிவிக்க முடியும்.

முதல்முறை

முதல்முறை

எந்த ஒரு வீரரும் இப்படி black lifes matter பிரச்சாரத்தை எதிர்ப்பார் என்று நான் நினைக்கவில்லை. அப்படி ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. முதல்முறை இப்படிக் கேள்விப்படுகிறேன். நாங்கள் தொடர்ந்து இந்த இந்த பிரச்சாரத்திற்குக் குரல் கொடுப்போம். இது உரிமைக்கான குரல்" என்று அவர் தெரிவித்தார்.

டி20 உலக கோப்பை

டி20 உலக கோப்பை

தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை எடுத்தது. அணியின் லிவிஸ் 56 ரன்களை குவித்தார். அவரைத் தவிர மற்றவர்கள் பெரிதாக ரன் குவிக்க தவறிவிட்டனர். அதன் பிறகு பேட் செய்த தென்னாப்பிரிக்கா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 144 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. சூப்பர் 12இல் தென்னாப்பிரிக்கா இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியைப் பெற்றுள்ளது. அதேநேரம் வெஸ்ட் இண்டீஸ் விளையாடி 2 போட்டிகளிலும் தோற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
West Indies skipper Kieron Pollard latest press meet. T20 world cup latest updates in tamil.
Story first published: Wednesday, October 27, 2021, 17:39 [IST]
Other articles published on Oct 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X