For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அரங்கம் அதிர தொடர் சிக்ஸர்கள்.... நியாபகத்துக்கு வந்த யுவ்ராஜ் சிங்... உலக சாதனை படைத்த பொல்லார்ட்

வெஸ்ட் இண்டீஸ்: இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் பொல்லார்ட் காட்டிய சரவெடி ஆட்டத்தில் இதுவரை யாரும் எட்டமுடியாத யுவ்ராஜ் சிங்கின் சாதனையை செய்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கெயீரன் பொல்லார்ட் காட்டிய அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது.

மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து மொத்தமே 6 ஓவர்கள்தான்..4வது டெஸ்டில் இருந்து விலகும் பும்ரா..ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டதாக கருத்து

போட்டியின் போது இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் யுவ்ராஜ் சிங்கின் சிக்ஸர் சாதனையை பொல்லார்ட்-ம் செய்து அசரடித்தார்.

சொற்ப ரன்கள்

சொற்ப ரன்கள்

3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்களான டிக்வெல்லா, தனுஷா குணதிலகா ஜோடி சொற்ப ரன்களில் பிரிந்தது. இதன் பின்னர் களமிறங்கியவர்களும் பெரிய அளவில் சோபிக்காததால் இலங்கை அணி 20 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸும் தடுமாற்றம்

வெஸ்ட் இண்டீஸும் தடுமாற்றம்

இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் சிம்மன்ஸ் (26), இவின் லிவிஸ் (28) சிறப்பான ஓப்பனிங் கொடுத்தனர். ஆனால் 4ஆவது ஓவரை வீசிய ஸ்பின்னர் அகிலா தனஞ்சயா ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதனால், லிவிஸ், கிறிஸ் கெய்ல் (0), நிகோலஸ் பூரன் (0) அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

காட்டடி

காட்டடி

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கெய்ரன் பொல்லார்ட், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய தனஞ்சயா வீசிய 6 ஆவது ஓவரில் 6 சிக்ஸர்கள் பறக்கவிட்டு அரங்கத்தை மிரட்டினார். இறுதியில் 13.1 ஓவரில் 134 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அசத்தலான வெற்றியை பெற்றது.

யுவ்ராஜ் சிங்

யுவ்ராஜ் சிங்

இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய வீரர் யுவ்ராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து சாதனை படைத்தார். அதே போல் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்செல் கிப்ஸும் இதனை செய்தார். இந்நிலையில் நேற்று பொல்லார்ட் அதனை சமன் செய்துள்ளார். மேலும் ஒரு போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் தொடர்ந்து 6 சிக்ஸர் அடித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

Story first published: Thursday, March 4, 2021, 17:07 [IST]
Other articles published on Mar 4, 2021
English summary
Kieron Pollard's 6 Sixes became the third player in international cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X