For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னிக்கு ஜெயித்தால் ப்ரீத்திக்கு பெரும் சந்தோஷம் கிடைக்கும்.. ஏன்னு சொல்லுங்க பார்ப்போம்?!

கொல்கத்தா: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மட்டும் இன்று நடக்கும் குவாலிஃபயர் போட்டியில் ஜெயித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் அதன் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவுக்கு மிகப் பெரிய சந்தோஷம் கிடைக்கும்.. சந்தோஷத்தில் தாண்டவமே ஆடி விடும் வாய்ப்ப்பும் உள்ளது.. ஏன் தெரியுமா.. இதுவரை ஐபிஎல் இறுதிப் போட்டி எதற்குமே பஞ்சாப் அணி தகுதி பெற்றதில்லை என்பதால்.

அப்படிப்பட்ட ஒரு அருமையான வாய்ப்பு இன்று மேக்ஸ்வெல், ஜான்சன், மில்லர், பெய்லி, சந்தீப் சர்மா உள்ளிட்டோரின் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.

இன்று மட்டும் பஞ்சாப் பட்டையைக் கிளப்பும் வகையில் ஆடினால் நிச்சயம் அந்த அணிக்கு வெற்றி உறுதி. இறுதிப் போட்டிக்கும் முதல் முறையாக நுழைந்து விடலாம்.

14 போட்டிகளில் 11 வெற்றி

14 போட்டிகளில் 11 வெற்றி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நடப்புத் தொடரில் 14 போட்டிகளில் ஆடி 11 வெற்றிகளை ஈட்டியுள்ளது. இது ஒரு சாதனையாகும். தோற்ற 3 போட்டிகளிலும் கூட பஞ்சாப் வென்றிருக்கலாம். ஆனால் மேக்ஸ்வெல் போன்ற சில முக்கிய வீரர்கள் அப்போட்டிகளில் ஜொலிக்காமல் போனதால்தான் தோல்வியைச் சந்திக்க நேரிட்டு விட்டது.

இதுவரை இறுதிப் போட்டிக்கு வந்ததே இல்லை

இதுவரை இறுதிப் போட்டிக்கு வந்ததே இல்லை

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை இறுதிப் போட்டிக்கு ஒருமுறை கூட தகுதி பெற்றதில்லை. ஓரளவுக்கு வருமே தவிர ஒருமுறை கூட பிளே ஆப் பக்கமே வந்ததில்லை. அந்த வகையில் இது அந்த அணிக்கு பெரிய சாதனைதான்.

செம பேட்டிங்

செம பேட்டிங்

பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள். குறிப்பாக மேக்ஸ் 533 ரன்களை இதுவரை குவித்துள்ளார் மில்லர் 399 ரன்களை எடுத்துள்ளார். கேப்டன் பெய்லி 229 ரன்களை எடுததுள்ளார்.

அப்பப்ப கலக்கும் ஷேவாக்

அப்பப்ப கலக்கும் ஷேவாக்

தொடக்க ஆட்டக்காரரான ஷேவாக் அவ்வப்போது நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறார். பெரிய ஸ்கோரை இதுவரை இவர் எட்டவில்லை என்ற போதிலும் பிரமாதமான தொடக்கம் உத்தரவாதமாக கிடைக்கிறது. இதுவரை 324 ரன்களையும் ஷேவாக் சேர்த்துள்ளது நிச்சயம் அவருக்கு சிறந்த மறு வருகையாக அமைந்துள்ளது.

பேட்டிங் மன்னன் மனன் வோஹ்ரா

பேட்டிங் மன்னன் மனன் வோஹ்ரா

மறுபக்கம் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் மனன் வோஹ்ராவும் நல்ல பார்மில் உள்ளார். சாலிடாக ஆடுகிரார். இவர் இதுவரை 197 ரன்களைக் குவித்துள்ளார்.

பஞ்சாப் அளவுக்கு கொல்கத்தா இல்லைதான்

பஞ்சாப் அளவுக்கு கொல்கத்தா இல்லைதான்

மறுபக்கம் பேட்டிங், பவுலிங்கில் பஞ்சாப் அளவுக்கு கொல்கத்தா இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் ரன் குவிப்பில் மேக்ஸ்வெல்லை ஓரம் கட்டி 613 ரன்களைக் குவித்து சத்தம் போடாமல் சைலன்ட் பாம்ப் போல இருக்கிறார் ராபின் உத்தப்பா. அதிரடியாக வெளுத்தெடுக்கும் யூசுப் பதானும் இருக்கிறார். கை கொடுக்க கம்பீர் இருக்கிறார். பந்து வீச்சிலும் பேட்டிங்கிலும் ஜொலிக்கும் ஷாகிப் அல் ஹசன் இருக்கிறார். மணீஷ் பாண்டேவும் இருக்கிறார்.

சுரீரெனத் தாக்கும் சுனில் நரீன்

சுரீரெனத் தாக்கும் சுனில் நரீன்

பந்து வீச்சில் மாயாஜாலம் காட்டி 20 விக்கெட்களை வீழ்த்தி இநதத் தொடரிலேயே அதிக விக்கெட்களை வீழ்த்தியவராக விளங்கும் சுனில் நரீன் கொல்கத்தாவின் பெரும் பலம்.

மொத்தத்தில் இரு தரப்பிலும் வெடிகுண்டுகளும், சாட்டையடிகளும் நிறையவே உள்ளன.. எந்த வெடி சரியாக வெடித்து பட்டையைக் கிளப்பப் போகிறது என்பதுதான் இப்போதைய காத்திருப்புக் கேள்வி...

Story first published: Tuesday, May 27, 2014, 16:55 [IST]
Other articles published on May 27, 2014
English summary
If the resounding success that Kings XI Punjab has achieved in the Pepsi IPL so far is anything to go by, it will be the front-runner to win the title in the seventh season. As the team comes face-to-face with the 2012 champion Kolkata Knight Riders in the first Qualifier at the Eden Gardens on Tuesday, KXIP can fancy its chances of making its maiden entry into the title round.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X