For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிளே-ஆப் சுற்றுக்கு போக நாங்க ரெடீங்கோ... கேகேஆரை பின்னுக்கு தள்ளி மேலேறிய பஞ்சாப் அணி

ஷார்ஜா : ஐபிஎல்லின் 46வது லீக் போட்டியில் நேற்றைய தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. தன்னுடைய இலக்கை 18.5 ஓவர்களிலேயே அந்த அணி எட்டியது.

இதையடுத்து கேகேஆர் அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

பஞ்சாப் அதிரடி வெற்றி

பஞ்சாப் அதிரடி வெற்றி

ஐபிஎல்லின் 46வது லீக் போட்டி நேற்றைய தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய கேகேஆர் அணியால் 149 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்த நிலையில், தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் அணிகள் தீவிரம்

ஐபிஎல் அணிகள் தீவிரம்

ப்ளே-ஆப் சுற்றிலிருந்து சிஎஸ்கே அணி முதல் அணியாக வெளியேறியுள்ளது. இதையடுத்து அதற்கான போட்டியில் மற்ற அணிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திற்கான போட்டி தீவிரமாக இருந்த நிலையில், தற்போது கேகேஆர் அணியை பின்னுக்கு தள்ளி பஞ்சாப் அணி அந்த இடத்தில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

4வது இடத்தில் பஞ்சாப் அணி

4வது இடத்தில் பஞ்சாப் அணி

நேற்றைய வெற்றி மூலம் தொடர்ந்து ஐந்தாவது வெற்றியை பெற்றுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. இதன்மூலம் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது. கேகேஆர் அணியும் 12 புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் புள்ளிகள் அடிப்படையில் அந்த அணி 5வது இடத்தில் உள்ளது.

ஷமி சிறப்பு

ஷமி சிறப்பு

நேற்றைய போட்டியில் மன்தீப் சிங் மற்றும் கிறிஸ் கெயிலின் அதிரடி ஆட்டம் மற்றும் ஷமியின் சிறப்பான பௌலிங் அந்த அணியை வெற்றிநடை போட வைத்துள்ளது. இதனிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் 10 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் நிலை கொண்டுள்ளது.

இரண்டாவது இடத்தில் ஷிகர்

இரண்டாவது இடத்தில் ஷிகர்

நேற்றைய போட்டியில் 25 பந்துகளில் 28 ரன்களை அடித்ததன்மூலம் தொடர்ந்து 595 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல். அவரை 471 ரன்களுடன் ஷிகர் தவான் தொடர்கிறார். நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன்மூலம் காகிசோ ரபடாவை 20 விக்கெட்டுகளுடன் தொடர்கிறார் முகமது ஷமி.

Story first published: Tuesday, October 27, 2020, 10:53 [IST]
Other articles published on Oct 27, 2020
English summary
Mohammed Shami took a three-wicket haul to take his tally to 20 in the season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X