For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்க ஊருங்கள்ல காலையில இப்படிதான் உட்காருவாங்க... ரோட்ஸின் யோகாசனத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்

அபுதாபி : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நாளை அபுதாபியில் ஐபிஎல்லின் 50வது லீக் போட்டியில் மோதவுள்ளன.

கடந்த 43வது ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வெற்றி கொண்டது பஞ்சாப் அணி. தொடர்ந்து 5வது வெற்றியின் மூலம் ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் பீல்டிங் கோச் ஜான்டி ரோட்ஸ், யோகாசனம் செய்த புகைப்படத்தை அந்த அணி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

5வது தொடர் வெற்றி

5வது தொடர் வெற்றி

ஐபிஎல்லின் 43வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இது அந்த அணியின் தொடர் 5வது வெற்றி. இந்த வெற்றியையடுத்து ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்திற்கு அந்த அணி முன்னேறியுள்ளது.

50வது லீக் போட்டி

50வது லீக் போட்டி

இந்நிலையில் நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐபிஎல் 50வது லீக் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளது பஞ்சாப் அணி. ஆரம்பத்தில் அதிக வெற்றிகளை பெறாத அந்த அணி தற்போது தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. இதையடுத்து பிளே-ஆப் பந்தயத்தில் அந்த அணி முக்கிய நான்கு இடங்களில் உள்ளது.

ரசிகர்கள் ஜாலி கமெண்ட்

ரசிகர்கள் ஜாலி கமெண்ட்

இந்நிலையில் அந்த அணியின் பீல்டிங் கோச் ஜான்டி ரோட்ஸ் யோகாசனம் செய்த புகைப்படத்தை அந்த அணி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. குத்துக்காலிட்டபடி அவர் செய்துள்ள அந்த யோகாசனம், ரசிகர்களின் பல்வேறு கமெண்ட்டுகளை பெற்றுள்ளது.

ரசிகரின் குறும்பு கமெண்ட்

ரசிகரின் குறும்பு கமெண்ட்

ஒரு ரசிகர் ஒரு படி மேலே சென்று நீண்ட காலங்களாக இந்தியாவில் காலை வேளைகளில் இந்த ஆசனம் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 12 புள்ளிகளை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பெற்றுள்ளது. அடுத்து விளையாடவுள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் கனவு அந்த அணிக்கு நனவாகும்.

Story first published: Thursday, October 29, 2020, 15:01 [IST]
Other articles published on Oct 29, 2020
English summary
KXIP's next two matches are must-win games
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X