தவான் உங்க கிட்ட மட்டும்தானா.. எங்க கிட்டயும் இருக்கு.. எடுத்துக் காட்டிய கிரண் மோரே!

டெல்லி: ஆஸ்திரேலிய தொடரில் விளையாட சென்றுள்ள இந்திய தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷிகர் தவான் அணியின் புது ஜெர்சியை அணிந்து போஸ் கொடுத்து கலக்கினார். அவருக்கு கிரண் மோரே பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரண் மோரே 1992-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இருந்த ஜெர்சியை அணிந்து டுவிட்டரில் பதிவிட்டு வரவேற்பை பெற்றுள்ளார்.

1992 உலகக் கோப்பைப் போட்டி குறித்தும் அவர் சிலாகித்து கமெண்ட் போட்டுள்ளார். மறக்க முடியுமா அந்தத் தொடரை என்றும் அவர் கூறியுள்ளார்.

 புது சீருடை

புது சீருடை

இந்திய கிரிக்கெட் அணி 3ஒருநாள், 3 டி2௦, 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ளது. நேற்று இந்திய அணியின் புது ஜெர்சியை அணிந்து டுவிட்டரில் போஸ் கொடுத்த ஷிகர் தவான், புது ஜெர்சி, புது தெம்பு, போட்டிக்கு தயார் என பதிவிட்டது வரவேற்பை பெற்றது.

 அசத்தல்

அசத்தல்

இந்த நிலையில் இந்திய அணி முன்னாள் வீரரும், விக்கெட் கீப்பருமான கிரண் மோரே, தவானை போலவே இந்திய அணியின் பழைய ஜெர்சியை அணிந்து போஸ் கொடுத்து நெட்டிசின்களை தெறிக்க விட்டுள்ளார். 1992-ஆம் ஆண்டு உலக்கோப்பைக்கான இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து டுவிட்டரில் போட்டோ வெளியிட்டுள்ளார் அவர்.

 கச்சிதமாக பொருந்துகிறது

கச்சிதமாக பொருந்துகிறது

"எனக்கு என்ன கிடைச்சிருக்கு பாருங்க.. இது 1992-ஆம் உலக்கோப்பை ஜெர்சி.. இன்னும் எனக்கு கச்சிதமாக பொருந்துகிறது. என்னை அந்த தொடரின் இனிமையான மறக்க முடியாத நினைவுகளை நோக்கி பின்னோக்கி இழுத்து செல்கிறது. அந்த பசுமையான நினைவுகளின் காற்றில் பறப்பது போல் உள்ளது.

 பரிதாப தோல்வி

பரிதாப தோல்வி

என்ன ஒரு அற்புதமான தொடர் என்றும் பதிவிட்டுள்ளார். அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மியான்தத், மோரேவிடம் வம்பிழுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது. அதற்கு மோரே கொடுத் பதிலடியும் பிரபமலானது.

 மறக்க முடியாதுதான்

மறக்க முடியாதுதான்

இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கிரண் மோரே குறிப்பிட்ட 1992-ஆம் ஆண்டு உலகக்கோப்பை அவருக்கு வேண்டுமானால் பசுமையான தொடராக இருந்திருக்கலாம், ஆனால் இந்திய ரசிகர்களுக்கு அது மறக்க முடியாத மிகவும் மோசமான நாட்களாகும்.

 தோத்து போயிட்டோம் பரமா!

தோத்து போயிட்டோம் பரமா!

ஏனெனில் அந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி அதில் 5 தோல்வியுடன் தகுதி சுற்றிலேயே நடையை கட்டியது. பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி, இங்கிலாந்தை வித்தியாசமாக வீழ்த்தி முதன் முறையாக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது . இதைத்தான் மறக்க முடியாத தொடர் என்று மோரே கூறியுள்ளாரா என்று தெரியவில்லை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Former India captain Kiran More posted a photo on Twitter of himself wearing a jersey of the 1996 World Cup.
Story first published: Wednesday, November 25, 2020, 12:24 [IST]
Other articles published on Nov 25, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X