For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனிக்காக 10 நாட்கள் வாக்குவாதம்... மனம் இறங்காமல் இருந்த கங்குலி.. உண்மையை கூறிய கிரண் மோரே!

பாகிஸ்தான்: எம்.எஸ்.தோனி அணிக்கு சேர்ந்த விதம் மற்றும் அதற்காக நடந்த வாக்குவாதங்களை முன்னாள் வீரர் கிரண் மோரே பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனி கேப்டன்சி மற்றும் ஃபினிஷிங்கிற்கு மிகவும் பிரபலமானவர். ஆனால் அவரின் விக்கெட் கீப்பிங்கிற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

கீப்பிங்கை பொறுத்தவரை தோனிக்கு ஈடுகொடுக்க உலகில் யாருமே இல்லை என பலரும் பாராட்டியுள்ளனர். அதற்கு காரணம் அவரது வேகம்.

கீப்பிங்

கீப்பிங்

எம்.எஸ்.தோனி ஸ்டம்ப்பிற்கு பின்னால் நின்றுக்கொண்டு பவுலரிடன் தெரிவிக்கும் வியூகங்கள் கணகட்சிதமாக நிறைவேறியுள்ளது. இப்படிபட்ட தோனியை முதன்முதலில் விக்கெட் கீப்பிங்கிற்காக கண்டுபிடித்தவர் முன்னாள் வீரர் கிரண் மோரே என்பது பலருக்கும் தெரியாது. இவர் தற்போது தோனியை அணிக்குள் சேர்த்தது குறித்து பேசியுள்ளார்.

 வியப்படைந்தேன்

வியப்படைந்தேன்

இந்திய அணியில் ராகுல் டிராவிட்-க்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பரை தேடி வந்தோம். கிரிக்கெட் முறைகள் மாறிக்கொண்டிருந்த நேரம் அது. எனவே பேட்டிங் வரிசையில் 6 -7வது இடத்தில் களமிறங்கி அதிரடி காட்டுப்பவராய் இருக்க வேண்டும் என எண்ணினோம். அப்போது தான் தோனியை ஒரு உள்ளூர் போட்டியில் பார்த்தேன். அணியின் ஸ்கோர் 170 ஆக இருந்த நிலையில் தோனி மட்டுமே அதில் 130 ரன்களை விளாசி இருந்தார். நான் வியப்படைந்தேன்.

தோனிக்காக சண்டை

தோனிக்காக சண்டை

உடனடியாக அந்த தொடரின் இறுதிப்போட்டியில் தோனிக்கு விக்கெட் கீப்பர் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கங்குலியிடம் கோரினேன். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஏனென்றால் தீப் தசகுப்தா ஏற்கனவே விக்கெட் கீப்பிங் பணியை செய்து வந்தார். பின்னர் கங்குலியை சமாதானப்படுத்துவதற்கு எங்களுக்கு 10 நாட்கள் எடுத்துக்கொண்டது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கி வந்த எம்.எஸ்.தோனி, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் தற்போது ஐபிஎல் தொடரில் மற்றும் பங்கேற்று வருகிறார். அவரின் தலைமையில் சிஎஸ்கே அணி இந்தாண்டு மிகச்சிறப்பாக ஆடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 1, 2021, 21:11 [IST]
Other articles published on Jun 1, 2021
English summary
Kiran more Recalls his days of convince Sourav Ganguly to let MS Dhoni keep wickets
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X