என்னாச்சு கொல்கத்தா அணிக்கு? இது வேற லெவல் "ஃபயர்" ஆட்டம் - தூள் தூளானது "சாம்பியன்" மும்பை!

அபுதாபி: மும்பை இந்தியன்ஸ் அணியை புரட்டி எடுத்து கொத்து புரோட்டா போட்டுவிட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்.19ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், இன்று (செப்.23) நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்ய, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, குயின்டன் டி காக் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ரோஹித் ஷர்மா 33 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த போது சுனில் நரைன் ஓவரில் கேட்ச் ஆனார். இதையடுத்து ஒன் டவுன் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வெறும் 5 ரன்களில் எட்ஜ் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷனும் 14 ரன்களில் ஃபெர்கியூசன் ஓவரில் கேட்ச்சாகி வெளியேறினார். பிறகு பொல்லார்ட் 21 ரன்களும், க்ருனால் பாண்ட்யா 12 ரன்களும் எடுத்து அவுட்டாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில், 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில், ஃபெர்கியூசன், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார். ஆனால், அவருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.

இதையடுத்து, கொல்கத்தா அணியில் ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு சிக்ஸர்கள் பறந்தன. கில் முதல் சிக்ஸர் அடிக்க, பெங்களூரு அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிய இளம் வீரர் வெங்கடேஷ் ஐயர் இரண்டாவது சிக்ஸரை விளாசினார். இந்நிலையில், கில் 13 ரன்களில் அவுட்டானாலும், வெங்கடேஷ் ஐயர் மும்பை பவுலர்களை விட்டு விளாசினார். இந்த போட்டியில் அவர் சந்தித்த முதல் பந்து போல்ட் வீசியது தான். ஆனால் அந்த பந்து வந்த வேகத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் சிக்சருக்கு பறந்தது தான் ஆச்சர்யம். கொஞ்சம் கூட பயமோ, பதட்டமோ அவரிடம் இல்லை. தேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரரைப் போல விளையாடினார். 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். இறுதியில் அவர் 30 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார்.

3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது! 3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது!

மறுபக்கம், ஒன் டவுன் வீரராக களமிறங்கிய ராகுல் திரிபாதி, அரைசதம் அடித்து மும்பை பவுலர்களை படாதபாடு படுத்தினார். ஆனால், கடைசி வரை மும்பை அணியால் ஆதிக்கம் செலுத்தவே முடியவில்லை. இறுதி, கொல்கத்தா அணி 15.1வது ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் அடித்து மெகா வெற்றியை பதிவு செய்தது. முதல் போட்டியில் ஆர்சிபி அணியை காலி செய்த கொல்கத்தா, இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியை கொத்து புரோட்டா போட்டது. இந்த வெற்றியின் மூலம், கொல்கத்தா அதிக ரன் ரேட்டுடன் (+0,36) 4வது இடத்துக்கு முன்னேறியது. 9வது போட்டியில் நான்காவது வெற்றியை பதிவு செய்தது. அதேசமயம், 9வது போட்டியில் விளையாடிய மும்பை 5 தோல்வியை பதிவு செய்தது. அதுமட்டுமல்ல, புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு பின்தங்கியது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
KKR beat MI by 7 wickets and moved to 4th spot - கொல்கத்தா
Story first published: Thursday, September 23, 2021, 23:07 [IST]
Other articles published on Sep 23, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X