For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லாமே வதந்தி... அவரை விடுவிக்கறதா சொல்லவேயில்லையே... ஜகா வாங்கிய கேகேஆர்

டெல்லி : கேகேஆர் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக்கை இந்த ஐபிஎல் 2021 சீசனில் அந்த அணி விடுவிக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் அவை எல்லாம் வதந்தி என்றும் அணி நிர்வாகத்திற்கு அதுபோன்ற எண்ணம் இல்லை என்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தெரிவித்துள்ளது.

கடந்த சீசனில் கேகேஆர் அணியின் கேப்டனாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக் தொடரின் இடையிலேயே தனது பொறுப்பை இயான் மார்கனிடம் ஒப்படைத்தார்.

சிறப்பாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக்

சிறப்பாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக்

கேகேஆர் அணியின் கேப்டனாக கடந்த சீசனில் செயல்பட்டார் தினேஷ் கார்த்திக். அவரது தலைமையில் அணி சில வெற்றிகளையும் பெற்றது. ஆனால் இடையிலேயே அவர் தனது கேப்டன் பொறுப்பை இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனிடம் ஒப்படைக்க வேண்டி வந்தது.

குல்தீப் யாதவும் விடுவிப்பு

குல்தீப் யாதவும் விடுவிப்பு

இதையடுத்து கேகேஆர் அணியின் வெற்றி வாய்ப்புகள் சுத்தமாக நின்றது. கார்த்திக்கையே கேப்டனாக வைத்து இருந்திருக்கலாம் என்ற விமர்சனத்தை கேகேஆர் எதிர்கொண்டது. இந்நிலையில் இந்த சீசனில் தற்போது தினேஷ் கார்த்திக்கை அணியிலிருந்து கேகேஆர் விடுவிக்க உள்ளதாக பல்வேறு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது. குல்தப் யாதவும் விடுவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

குல்தீப் யாதவை அணியிலிருந்து விடுவிக்கும் நிலையில், அந்த அணிக்கு ஐபிஎல் 2021 ஏலத்தை எதிர்கொள்ள 5.8 கோடி ரூபாய் கிடைக்கும். இதனிடையே, தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக அணியில் உள்ள டாம் பான்டன் மற்றும் நிகில் நாயக் ஆகிய வீரர்களை கொண்டு விக்கெட் கீப்பிங்கை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது.

கேகேஆர் அணி உறுதி

கேகேஆர் அணி உறுதி

கடந்த தொடரில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் தனது அதிரடியை நிரூபிக்கவில்லை. இதன் காரணமாக தினேஷ் கார்த்திக் விடுவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கை அணியிலிருந்து விடுவிக்கும் எண்ணமில்லை என்று கேகேஆர் அணி தரப்பில் தற்போது கூறப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, January 20, 2021, 14:27 [IST]
Other articles published on Jan 20, 2021
English summary
KKR denied rumours of Releasing Dinesh Karthik
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X