For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொல்கத்தா அணியில் பாகிஸ்தான் வீரர்... ஷாருக்கான் அப்போதே போட்ட திட்டம்.. வாய்ப்பை தவறவிட்ட வீரர்!

மும்பை: கொல்கத்தா அணியில் பாகிஸ்தான் வீரர் ஒருவரை இழுக்க ஷாருக்கான் திட்டம் போட்டுள்ளது தெரியவந்துள்ளது.

உலகில் உள்ள உள்நாட்டு தொடர்களிலேயே ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானவை என்று கூறலாம். பல நூறு கோடிகள் இந்த தொடரில் புரளுகின்றன.

8- 9 நாட்களாக தூங்கல.. கிரிக்கெட்டே போச்சினு நினச்ச.. ஐபிஎல்-ல் சந்தித்த வேதனைகள்..அஸ்வின் ஓபன் டாக்8- 9 நாட்களாக தூங்கல.. கிரிக்கெட்டே போச்சினு நினச்ச.. ஐபிஎல்-ல் சந்தித்த வேதனைகள்..அஸ்வின் ஓபன் டாக்

இந்த தொடரில் பங்கேற்று விளையாடிவிட வேண்டும் என அயல்நாட்டு வீரர்கள் பலரும் ஆசைப்பட்டு வருகிறார்கள் என்றே கூறலாம். ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

பாக்.வீரர்கள்

பாக்.வீரர்கள்

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்று விளையாட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு தற்போதுவரை பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில வீரர்கள் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையை பெற்று இந்த தொடரில் விளையாட யோசித்தனர்.

ஐபிஎல்-க்கு அழைப்பு

ஐபிஎல்-க்கு அழைப்பு

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாட தனக்கு வந்த மிகப்பெரும் வாய்ப்பை தவறவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் யாசிர் அராஃபாட் தெரிவித்துள்ளார். அவர், ஐபிஎல் 2வது சீசனில் கொல்கத்தா அணி சார்பில் ஒரு நபர் என்னை அனுகினார். அவர் என்னிடம், ஷாருக்கான் உனது ஆட்டத்தை உண்ணிப்பாக கவனித்து வருகிறார் எனக்கூறினார். ஆனால் நான் அதை நம்பவில்லை. அவரின் ஐடி கார்டை காட்டிய பிறகும் அவரை நம்பவில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாட தனக்கு வந்த மிகப்பெரும் வாய்ப்பை தவறவிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் யாசிர் அராஃபாட் தெரிவித்துள்ளார். அவர், ஐபிஎல் 2வது சீசனில் கொல்கத்தா அணி சார்பில் ஒரு நபர் என்னை அனுகினார். அவர் என்னிடம், ஷாருக்கான் உனது ஆட்டத்தை உண்ணிப்பாக கவனித்து வருகிறார் எனக்கூறினார். ஆனால் நான் அதை நம்பவில்லை. அவரின் ஐடி கார்டை காட்டிய பிறகும் அவரை நம்பவில்லை.

 ஷாருக்கான் ஒப்பந்தம்

ஷாருக்கான் ஒப்பந்தம்

பிறகு இந்தியாவில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதில் கொல்கத்தா அணி 3 வருட ஒப்பந்தம் என்னிடம் போட தயாராக இருப்பதாக தெரிவித்தனர். அப்போதுதான் நான் அந்த நபர் தெரிவித்தது உண்மை தான் என நம்பினேன். பின்னர் கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான் நேரடியாக என்னை தொடர்பு கொண்டார். லண்டனுக்கு வருகை தந்து என்னிடம் ஒப்பந்தம் போட விரும்பினார்.

கே.கே.ஆர் அணி

கே.கே.ஆர் அணி

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ளது. ஆனால் கவுதம் கம்பீர் ஓய்வு பெற்றதில் இருந்து அணியின் செயல்பாடுகள் மிக மோசமாக இருந்து வருகிறது. இந்தாண்டு தொடரில் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி 7 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Thursday, June 10, 2021, 20:59 [IST]
Other articles published on Jun 10, 2021
English summary
Pakistan former Player Yasir Arafat missed the Oppurtunity to participate in IPl, says KKR owner Shah Rukh Khan offered a 3-year IPL contract in 2008
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X