For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லாருமே மோசமா பௌலிங் போட்டாங்க.. ஆனா எங்களுக்கு இவர் தான் குறி! ஐயோ பாவம்.. அஸ்வின்!!

Recommended Video

ரசிகர்களிடம் சிக்கிய அஸ்வின்,விடாமல் கேலி, கிண்டல்!- வீடியோ

கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் போட்டியில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சு மிக மோசமாக அமைந்தது.

பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சும் மோசமாக அமைந்ததது. ஆனால், மற்ற பந்துவீச்சாளர்களை விட்டு விட்டு அஸ்வினை கட்டம் கட்டிய இணையவாசிகள், செமையாக கேலியும், கிண்டலும் செய்து வருகிறார்கள்.

KKR vs KXIP: ரவுண்டு கட்டிய ரசல், ஊதி தள்ளிய உத்தப்பா.. பந்துவீச்சில் ஒட்டுமொத்த பெய்லியரான பஞ்சாப் KKR vs KXIP: ரவுண்டு கட்டிய ரசல், ஊதி தள்ளிய உத்தப்பா.. பந்துவீச்சில் ஒட்டுமொத்த பெய்லியரான பஞ்சாப்

கிண்டலுக்கு காரணம் என்ன?

கிண்டலுக்கு காரணம் என்ன?

பட்லரை, மன்கட் முறையில் அஸ்வின் ரன் அவுட் செய்தது தான் இந்த கேலி, கிண்டலுக்கு காரணம். அந்தப் போட்டி முடிந்து இரண்டு நாட்கள் முடிந்த பின்னரும், அஸ்வின் ட்ரென்டிங்கில் இருந்து வருகிறார்.

அஸ்வின் ட்ரென்டிங்

அஸ்வின் ட்ரென்டிங்

இந்தியாவில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலும் அஸ்வின் தான் ட்ரென்டிங். கொல்கத்தா போட்டியில் விக்கெட் எதுவுமின்றி, 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்திருந்தார் அஸ்வின். இவரது பந்துவீச்சில் மட்டும் 5 சிக்ஸர்கள் அடித்தனர் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள்.

அஸ்வின் பந்துவீச்சு

அஸ்வின் பந்துவீச்சு

ஷமி 4 ஓவர்களில் 44, வரும் சக்கரவர்த்தி 3 ஓவர்களில் 35 என அதிக ரன்கள் கொடுத்திருந்தாலும், அஸ்வின் கொடுத்த 4 ஓவர் 47 ரன்கள் இணையத்தில் கேலி, கிண்டலோடு பரவி வருகிறது.

அஸ்வின் - மன்கட் கேலி

"அஸ்வின் மன்கட் முறையில் மட்டுமே தான் விக்கெட் எடுப்பார் என்பதால் இன்று விக்கெட் எடுக்கவில்லை", :அஸ்வின் மன்கட் விக்கெட்டை தேடி வருகிறார்", "அஸ்வின் இன்று மோசமாக பந்து வீசக் காரணம், அவர் எதிர்முனை பேட்ஸ்மேனை தான் அதிகம் குறி வைத்தார்" இப்படி அஸ்வின் - மன்கட் விக்கெட் குறித்த கேலிகள் தூள் பறக்கின்றன.

இன்று மன்கட் இல்லை

ஒருவர் இன்னும் ஒரு படி மேலே போய், அஸ்வின் பந்து வீச்சு - 4 ஓவர்களில் 47 ரன்கள், 0 விக்கெட்கள், மன்கட் எதுவும் இல்லை என கலாய்த்துள்ளார்.

அடுத்த காமெடியன்

அடுத்த காமெடியன்

ஆக மொத்தத்தில, அஸ்வின் ஐபிஎல் முடியும் வரை இணையத்தின் அடுத்த காமெடியனாக மாறிவிட்டார். அதிலும், இந்தியா முழுவதிலும் அஸ்வினை குறிவைத்து இருப்பது அவரது கிரிக்கெட் வாழ்க்கையை சிக்கலாக்கும் எனத் தெரிகிறது.

Story first published: Thursday, March 28, 2019, 0:00 [IST]
Other articles published on Mar 28, 2019
English summary
KKR vs KXIP IPL 2019 : Ashwin trolled for poor bowling though the entire Punjab bowling unit failed.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X