For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அம்பயரை ரன் அவுட் செய்தார்!! பஞ்சாப் அணிக்கு பெரும் தலைவலியாக மாறிய அஸ்வின்! ஊசலாடும் கேப்டன் பதவி?

கொல்கத்தா : 2019 ஐபிஎல் தொடரின் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது அஸ்வினின் "மன்கட்" ரன் அவுட்.

ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை, அஸ்வின் மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அது கிரிக்கெட் நெறிக்கு மாறானது எனக் கூறி ரசிகர்கள் அஸ்வின் மேல் கடும் கோபத்தில் உள்ளனர்.

ராணா, உத்தப்பா சூப்பர்.. மரண காட்டு காட்டிய ரசல்... 218 ரன்களை குவித்த கொல்கத்தா ராணா, உத்தப்பா சூப்பர்.. மரண காட்டு காட்டிய ரசல்... 218 ரன்களை குவித்த கொல்கத்தா

வடு ஆறவில்லை

வடு ஆறவில்லை

அந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் அதன் வடு இன்னும் ஆறவில்லை. ரசிகர்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆடும் போட்டியில் அஸ்வினை குறி வைத்து கலாய்த்து வருகின்றனர்.

அஸ்வின் ட்ரோல்

இணையம் முழுவதும் "அஸ்வின் ட்ரோல்" என புதிதாக ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கை துவக்கி வைத்துள்ளனர் அஸ்வினின் செயலுக்கு எதிரான ரசிகர்கள். அஸ்வின் கொல்கத்தா போட்டியில் டாஸ் வென்றதை குறிப்பிட்டு, "அஸ்வின் டாஸ் வென்ற பின் தன்னை ரன் அவுட் செய்யவில்லை என்பதால் தினேஷ் கார்த்திக் நிம்மதி அடைந்தார்" என ஒருவர் ஓட்டியுள்ளார்.

டாஸ் வென்று ரன் அவுட்

அதே போல, "அஸ்வின் டாஸ் வென்று ரன் அவுட் செய்ய முடிவு செய்தார்" என இன்னொரு கலாய் பதிவையும் போட்டுள்ளார்.

அம்பயர் ரன் அவுட்

இன்னொருவர், "அஸ்வின் அம்பயரை ரன் அவுட் செய்து விட்டார்." என பிளாஷ் செய்தி போட்டு சிரிப்பு மூட்டியுள்ளார். ஆக மொத்தத்தில் ரசிகர்கள் பலர் அஸ்வின் மேல் செம கடுப்பில் இருக்கிறார்கள் என்பதும், அது இந்த ஐபிஎல் சீசன் முடியும் வரை ஓயப்போவதில்லை என்பதும் தெளிவாக தெரிகிறது.

விளம்பரதாரர்கள் பாதிப்பு?

விளம்பரதாரர்கள் பாதிப்பு?

அதோடு மட்டுமில்லாமல், இது பஞ்சாப் அணிக்கும் பெரிய பாதிப்பாக அமைந்துள்ளது. பஞ்சாப் அணியின் விளம்பரதாரர்கள் இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கருதினால், பஞ்சாப் அணிக்கு சிக்கல் ஏற்படும்.

கேப்டன் பதவி

கேப்டன் பதவி

மேலும், ரசிகர்கள் அஸ்வின் சரியாக பௌலிங் போடக்கூடாது என போட்டிக்கு முன்னர் கூறி வரும் சம்பவங்களும் அதிகம் நடைபெறுகிறது. மனதளவில் பஞ்சாப் அணிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவில்லை என்பதும் அந்த அணி நிர்வாகத்தை சிந்திக்க வைக்கும். அஸ்வின் மீதான எதிர்ப்பு குறையவில்லை என்றால் அவரது கேப்டன்சி பதவி போனாலும் ஆச்சரியமில்லை.

Story first published: Wednesday, March 27, 2019, 22:11 [IST]
Other articles published on Mar 27, 2019
English summary
KKR vs KXIP IPL 2019 : Fans still angry on Ashwin after Mankad incident
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X