ஐசிசி டி20 ரேங்கிங் பட்டியல் வெளியீடு - கோலியை முந்திய கே.எல். ராகுல்

Ind vs NZ: Kohli surpasses Ganguly in elite captaincy list

டெல்லி : ஐசிசி சர்வதேச டி20 போட்டிகளின் தற்போதைய தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை பின்னுக்கு தள்ளிவிட்டு தொடர்ந்து கே.எல்.ராகுல் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

இந்த பட்டியலில் 9வது இடத்தில் இருந்த கேப்டன் விராட் கோலி தற்போது 10வது இடத்திற்கு கீழே தள்ளப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் தற்போது முன்னேறியுள்ளார்.

இந்த பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்துவரும் நிலையில், அடுத்ததாக இந்திய துவக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல், மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர்.

அசோக்.. ஸாரி.. ரசிகர்களே.. நல்லா குறிச்சு வச்சுக்கங்க.. இனிமேல் இப்படித்தான் நடக்கும்.. கங்குலி!

இன்று வெளியீடு

இன்று வெளியீடு

சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகள், அதில் பங்கேற்கும் வீரர்கள் ஆகியவற்றை கணக்கில்கொண்டு அவ்வப்போது ஐசிசி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்மூலம் சர்வதேச அளவில் வீரர்களின் முன்னிலை விவரங்களை, அவர்களின் விளையாட்டு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். இந்நிலையில் ஐசிசி டி20 போட்டிகளின் தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நியூசிலாந்திற்கு எதிராக சிறப்பான ஆட்டம்

நியூசிலாந்திற்கு எதிராக சிறப்பான ஆட்டம்

இந்த பட்டியலில் தொடர்ந்து தனது இரண்டாவது இடத்தை இந்திய துவக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் தக்க வைத்துக் கொண்டுள்ளார். நியூசிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், முதலில் ஆடிய சர்வதேச டி20 தொடரில் 5 போட்டிகளிலும் வெற்றி கொண்டு, அந்த அணியை ஒயிட்வாஷ் செய்தது. இந்நிலையில், இந்த தொடரில் 224 ரன்களை குவித்து சராசரியாக 56 ரன்களை எடுத்துள்ள ராகுல், இதன்மூலம் தன்னுடைய தரவரிசையில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளார்.

ரோகித் சர்மாவும் கீழிறங்கினார்

ரோகித் சர்மாவும் கீழிறங்கினார்

இந்நிலையில் 9வது இடத்தில் இருந்த கேப்டன் விராட் கோலி தன்னுடைய இடத்தை இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனுக்கு விட்டுக்கொடுத்து, 10வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இவர் ஆடிய 4 போட்டிகளில் மொத்தமாக 105 ரன்களை மட்டுமே எடுத்துள்ள நிலையில், தன்னுடைய இடத்தை இவர் விட்டுக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த தொடரில் காயம் காரணமாக விளையாடாவிட்டாலும் ரோகித் சர்மா ஒரு இடம் பின்தங்கி 11வது இடத்தில் உள்ளார்.

2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி

2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி

சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 3க்கு 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இயான் மார்கன், 136 ரன்களை அடித்து விராட் கோலியை முந்தியுள்ளார். இதேபோல குயின்டன் டி கோக் 10 இடங்கள் முன்னேறி 16வது இடத்தை பிடித்துள்ளார்.

3வது இடத்தில் ஆரோன் பின்ச்

3வது இடத்தில் ஆரோன் பின்ச்

இந்த டி20 தரவரிசை பட்டியலில் முதலிடத்தை தொடர்ந்து பாகிஸ்தானின் பாபர் அசாம் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதையடுத்து இரண்டாவது இடத்தை கே.எல். ராகுலும், மூன்றாவது இடத்தை ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்சும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இதேபோல இந்த பட்டியலில் பௌலர் மற்றும் ஆல்ரவுண்டருக்கான முதலிடங்களில் ஆப்கானிஸ்தான் வீரர்கள், ரஷீத் கான் மற்றும் முகமது நபி ஆகியோர் நீடித்து வருகின்றனர்.

4வது இடத்தில் இந்தியா

4வது இடத்தில் இந்தியா

ஐசிசியின் டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி முதலிடத்திலும், இந்தியா 4வது இடத்திலும் உள்ளன. இதேபோல இரண்டாவது மற்றும் 3வது இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உள்ளன. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவிடமிருந்து 2 புள்ளிகள் மட்டுமே இங்கிலாந்து பின்தங்கியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
KL maintained his second spot in the latest ICC T20I rankings
Story first published: Monday, February 17, 2020, 17:31 [IST]
Other articles published on Feb 17, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X