For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த தம்பியை ஓரங்கட்டுங்க.. தோனியை டீம்ல சேருங்க.. இதெல்லாம் சகஜம்தான்.. முன்னாள் வீரர் அதிரடி!

டெல்லி : இந்திய அணியில் தோனி குறித்த விவாதம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவர் கடந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இதுவரை இடம்பெறவில்லை.

Recommended Video

Dhoni should be in playing XI says Mohammed Kaif

இந்த நிலையில், அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் தோனியை அணியில் சேர்க்க வேண்டும் என கூறி உள்ளார் முன்னாள் வீரர் முகமது கைப். ஐபிஎல் தொடரில் தோனி தன்னை நிரூபிக்க தேவையில்லை என கூறுகிறார் இவர்.

மேலும், தற்போது அணியில் விக்கெட் கீப்பராக இடம் பெற்று வரும் கேஎல் ராகுல் மாற்று விக்கெட் கீப்பராக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார் முகமது கைப்.

5 வயது பெண் சொன்னதை கேட்டு இப்படி பண்ணிட்டேன்.. ரசிகர்களிடம் கெஞ்சிய ஆஸி. வீரர்!5 வயது பெண் சொன்னதை கேட்டு இப்படி பண்ணிட்டேன்.. ரசிகர்களிடம் கெஞ்சிய ஆஸி. வீரர்!

கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர்

கேஎல் ராகுல் விக்கெட் கீப்பர்

இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியில் கேஎல் ராகுல் முதன்மை விக்கெட் கீப்பராக அறியப்படுகிறார். அவருக்கு முன் இளம் வீரர் ரிஷப் பண்ட் அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு, தன் மோசமான செயல்பாடுகளால் விமர்சனத்துக்கு உள்ளானார்.

தோனி இல்லை

தோனி இல்லை

தோனி கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றே கருதப்படுகிறது. இந்த நிலையில், அக்டோபர் மாதம் நடக்க இருந்தா டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட தோனி விரும்புவதாக ஒரு தகவல் வெளியானது.

ஐபிஎல் சந்தேகம்

ஐபிஎல் சந்தேகம்

அதற்கு தோனி தன் பார்மை நிரூபிக்க வேண்டும் என்றும், உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதற்கு 2020 ஐபிஎல் தொடரை அவர் பயன்படுத்த எண்ணி இருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இடையே கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மாற்று விக்கெட் கீப்பர்

மாற்று விக்கெட் கீப்பர்

இந்த நிலையில், ராகுல், தோனி பற்றி பேசி உள்ளார் முகமது கைப். "மக்கள் ராகுல் எதிர்காலத்தில் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பார் என எண்ணுகிறார்கள். ஆனால், நான் ராகுல் மாற்று விக்கெட் கீப்பராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார் கைப்.

காயம் ஏற்படும்

காயம் ஏற்படும்

"முதன்மை விக்கெட் கீப்பர் காயம் அடைந்தால், அவர் அணியில் இல்லாவிட்டால், அப்போது நாம் ராகுலை விக்கெட் கீப்பிங் பணி செய்ய அழைக்கலாம். ஆனால், அவரை முதன்மை விக்கெட் கீப்பராக பயன்படுத்தினால் அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது." என்றார் முகமது கைப்.

என் பார்வை வேறு

என் பார்வை வேறு

"பலரும் தோனி ஐபிஎல் தொடரில் எப்படி ஆடப் போகிறார்? அதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் இடம் பெறுவாரா? என்றெல்லாம் பேசி வருகிறார்கள். ஆனால், என் பார்வை அதில் இருந்து மாறுபட்டது" என தோனி அணியில் இடம் பெறுவது பற்றிய தன் பார்வையை கூறினார் கைப்.

தோனியை தேர்வு செய்ய ஐபிஎல் வேண்டாம்

தோனியை தேர்வு செய்ய ஐபிஎல் வேண்டாம்

"நான் தோனி பார்மை ஐபிஎல் ஆட்டத்தை வைத்து முடிவு செய்ய மாட்டேன். அவர் மாபெரும் பேட்ஸ்மேன். அவர் இப்போது தகுதியுடன் இருக்கிறார். அவர் ஐபிஎல் ஆட விரும்புகிறார், கேப்டன்சி செய்ய இருக்கிறார், தான் ஆடத் தயாராக இருப்பதை காண்பிக்கிறார்." என்றார்.

நியாயம் அல்ல

நியாயம் அல்ல

மேலும், "அவரிடம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அழுத்தத்தில் போட்டிகளை எப்படி வெல்வது என தெரிந்து வைத்துள்ளவர். எனவே, அவரை ஒதுக்கித் தள்ளுவது நியாயம் அல்ல." என தோனிக்கு ஆதரவாக பேசினார் முகமது கைப்.

ஏற்ற இறக்கம் சகஜம்

ஏற்ற இறக்கம் சகஜம்

"தோனியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் பாக்கி உள்ளது. இத்தனை நீண்ட காலம் ஒரு கிரிக்கெட் வீரர் ஆடினால், அவரது கிரிக்கெட் வாழ்வில் ஏற்ற, இறக்கம் இருக்கத்தான் செய்யும். இது தோனிக்கு மட்டுமல்ல, அனைத்து கிரிக்கெட் வீரருக்கும் ஏற்படும்" எனவும் கூறினார் கைப்.

Story first published: Thursday, April 16, 2020, 16:51 [IST]
Other articles published on Apr 16, 2020
English summary
KL Rahul Should be kept as backup wicket keeper and Dhoni should be in playing XI says Mohammed Kaif
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X