For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நீங்களே தான் மேல இருப்பீங்களா? முடிவுக்கு வந்த கோலி, ரோஹித் ஆதிக்கம்.. உடைத்தெறிந்த வருங்கால கேப்டன்

மும்பை : இந்திய அணியில் பேட்டிங்கில் கடந்த பத்து ஆண்டுகளில் ரோஹித் சர்மா, விராட் கோலி மட்டுமே செய்து வந்த சாதனையை உடைத்துள்ளார் கேஎல் ராகுல்.

இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடியது.

அதுவே 2020ஆம் ஆண்டில் இந்திய அணியின் கடைசி ஒருநாள் தொடர் ஆகும். இந்த ஆண்டில் இந்திய அணி 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளது.

9 போட்டிகள்

9 போட்டிகள்

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜனவரியிலும், தற்போது நவம்பரிலும் நடந்த இரு ஒருநாள் தொடர்கள் என மொத்தமே 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி ஆடி உள்ளது.

ஏன் குறைந்த போட்டிகள்?

ஏன் குறைந்த போட்டிகள்?

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக பல மாதங்கள் இந்திய அணி எந்த சர்வதேச கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்காமல் இருந்ததே குறைவான போட்டிகளில் ஆட முக்கிய காரணம். இந்த நிலையில், இந்த ஆண்டு இந்திய அளவில் அதிக ஒருநாள் போட்டி ரன் குவித்த வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

2020ஆம் ஆண்டு அதிக ஒருநாள் போட்டி ரன் குவித்த வீரர் கேஎல் ராகுல் தான். ராகுல் 9 போட்டிகளில் 443 எடுத்துள்ளார். அவர் மூன்று போட்டிகள் கொண்ட நியூசிலாந்து தொடரில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்து இருந்தார்.

கோலி இரண்டாம் இடம்

கோலி இரண்டாம் இடம்

ஆஸ்திரேலிய தொடர்களில் ஆறு போட்டிகளில் 239 ரன்கள் எடுத்தார். விராட் கோலியை விட 12 ரன்கள் கூடுதலாக எடுத்து முதல் இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 431 ரன்களுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

அடுத்த இடங்கள்

அடுத்த இடங்கள்

ஸ்ரேயாஸ் ஐயர் 331 ரன்கள், ஷிகர் தவான் 290 ரன்கள், ஜடேஜா 223 ரன்கள், பாண்டியா 210 ரன்கள் எடுத்து அடுத்த இடங்களில் உள்ளனர். ரோஹித் சர்மா 3 போட்டிகளில் மட்டுமே ஆடி 171 ரன்கள் எடுத்து பாண்டியாவுக்கும் பின்னே ஏழாம் இடம் மட்டுமே பிடித்துள்ளார்.

ஆதிக்கத்துக்கு முடிவு

ஆதிக்கத்துக்கு முடிவு

கடந்த பத்து ஆண்டுகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா மட்டுமே இந்திய அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்து வந்துள்ளனர். அதை உடைத்து எறிந்துள்ளார் கேஎல் ராகுல். இவர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கேப்டன்

அடுத்த கேப்டன்

மேலும், ரோஹித் சர்மா இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் கேஎல் ராகுல் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவர் தான் விராட் கோலிக்கு பின் இந்திய அணியின் கேப்டன் என இப்போதே சில தகவல்கள் வலம் வருகின்றன.

Story first published: Thursday, December 3, 2020, 12:07 [IST]
Other articles published on Dec 3, 2020
English summary
KL Rahul beat Virat Kohli, Rohit Sharma to score most ODI runs in 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X