“என்னுடைய பழக்கமே அதுதான்” கேப்டன்சியில் கவாஸ்கர் வைத்த குற்றச்சாட்டு.. கே.எல்.ராகுல் கொடுத்த பதிலடி

கேப்டவுன்: கேப்டன்சி விவகாரத்தில் தன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு கே.எல்.ராகுல் கடும் பதிலடி கொடுத்துள்ளார்.

Captaincy மீது கடும் விமர்சனம்.. பதிலடி கொடுத்த KL Rahul

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி 3 - 0 என வைட் வாஷ் ஆனது.

இதனையடுத்து வெற்றி பெற வேண்டிய போட்டிகளை கூட நழுவவிட்டுவிட்டார் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கே.எல்.ராகுல் மீது எழுந்தது.

என்ன கேப்டன்ஷிப் பண்ற..?? களத்தில் பாடம் எடுத்த கோலி.. கடுப்பான ராகுல்.. அணியில் விரிசல்?என்ன கேப்டன்ஷிப் பண்ற..?? களத்தில் பாடம் எடுத்த கோலி.. கடுப்பான ராகுல்.. அணியில் விரிசல்?

 இந்திய அணியின் தோல்வி

இந்திய அணியின் தோல்வி

ரோகித் சர்மா இல்லாததால் இந்திய அணியை வழிநடத்திய கே.எல்.ராகுல் ஃபீல்ட் செட்டிங்குகளில் பின் தங்கி இருப்பதாகவும், முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்ற தெரியாததால் மிடில் ஆர்டரில் ரன்களை வாரி வழங்கியதாக கூறப்பட்டது. 3வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி கேப்டன்சியில் உதவியதால் சற்று வெற்றி வாய்ப்பு கூடியிருந்தது.

கவாஸ்கரின் குற்றச்சாட்டு

கவாஸ்கரின் குற்றச்சாட்டு

இதனையடுத்து முன்னாள் வீரர்கள் பலரும் கே.எல்.ராகுலின் கேப்டன்சியை விளாசினர். குறிப்பாக சுனில் கவாஸ்கர், ராகுலுக்கு என்ன அனுபவம் உள்ளது என தெரியவில்லை. அவரின் கேப்டன்சியில் பஞ்சாப் அணி எதுவுமே செய்ததில்லை. எதிரணி பார்ட்னர்ஷிப் அமைக்கும் போதெல்லாம், கே.எல்.ராகுல் என்ன செய்வது என்று புரியாமல் திணறுகிறார். அடுத்த தொடர்களில் இருந்து இந்திய அணியின் "விதி" மாறுமா என்று பார்க்கலாம் என விரக்தியுடன் கூறியிருந்தார்.

 கே.எல்.ராகுல் பதிலடி

கே.எல்.ராகுல் பதிலடி

இந்நிலையில் விமர்சனங்களுக்கு எல்லாம் கே.எல்.ராகுல் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய அணியை வழிநடத்தியது பெருமையாக உள்ளது. தோல்விகள் வந்தது தான்.. ஆனால் அதில் இருந்து நான் கற்றுக்கொண்டேன். என்னுடைய கேப்டன்சி திறமைகளில் எனக்கு நம்பிக்கை உள்ளது. தோல்விகள் தான் மிகவும் பலமானவனாக என்னை மாற்றும். அந்தவகை இந்த தோல்வி எனக்கு நிறைய அனுபவங்களை கொடுத்துள்ளது.

பொறுமையாக இருங்கள்

பொறுமையாக இருங்கள்

என்னுடைய வாழ்வில் அனைத்தையும் நிதானமாகவே கற்று தெரிந்தவன் நான். இனி வரும் போட்டிகளில் என்னுடைய கேப்டன்சி சிறப்பாக அமையும். அணி வீரர்களிடம் இருந்தும் சரியான பங்களிப்புகளை பெறுவேன். இந்திய அணிக்கும், ஐபிஎல் அணிக்கும் நான் சரியான கேப்டன் தான் என்பதை உறுதியாக நம்புகிறேன் என கே.எல்.ராகுல் பதிலடி கொடுத்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
KL Rahul gives a massive answers to the former Cricket sunil gavaskar after doubts over his captaincy
Story first published: Tuesday, January 25, 2022, 10:38 [IST]
Other articles published on Jan 25, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X