"என்ன உங்க டீம்'ல எடுத்துப்பீங்களா பாஸ்? " முன்னாள் சிஎஸ்கே வீரர் கேள்வி.. கே.எல்.ராகுல் தந்த பதில்!

மும்பை: ஐபிஎல் மெகா ஏலம் குறித்து ஷர்துல் தாக்கூர், கே.எல்.ராகுல் மற்றும் யுவேந்திர சஹார் ஆகியோர் பேசிய வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதற்காக அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை ஏலம் எடுக்க போகிறோம் என்பது குறித்த ஆலோசனையை தொடங்கிவிட்டன.

“அந்த 3 இடங்களில் தான் ஐபிஎல் போட்டிகள்”.. இந்தியாவின் முக்கிய இடங்கள் தேர்வு.. பிசிசிஐ இறுதி முடிவு “அந்த 3 இடங்களில் தான் ஐபிஎல் போட்டிகள்”.. இந்தியாவின் முக்கிய இடங்கள் தேர்வு.. பிசிசிஐ இறுதி முடிவு

 ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் மெகா ஏலம்

இந்நிலையில் வீரர்களுக்கே, தாங்கள் எந்த அணிக்கு செல்லப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பு ஏக போகத்திற்கு உள்ளது. இதற்கு உதாரணமாக தான் லக்னோ அணிக்கு செல்ல கே.எல்.ராகுலிடம் ஷர்துல் மற்றும் யுவேந்திர சஹால் பேசியுள்ளனர். புதிதாக வந்துள்ள லக்னோ அணி கே.எல்.ராகுலை கேப்டனாக ஒப்பந்தம் செய்துள்ளது. இதே போல அகமதாபாத் அணி ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக்கியுள்ளது.

ஷர்துலின் ஆசை

ஷர்துலின் ஆசை

கே.எல்.ராகுலுடன் சேர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்த ஷர்துல் தாக்கூர், எனக்காக லக்னோ அணி ஏதேனும் தொகையை ஒதுக்கியுள்ளதா? எனக்கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ராகுல், உன்னுடைய அடிப்படை தொகையான ரூ.10 லட்சத்திற்கு வருகிறாய் என்றால் எடுத்துக்கொள்கிறோம் எனக்கூறினார். இதனால் அந்த பகுதியே கலகலப்பாக இருக்க, யுவேந்திர சஹால் தனது பங்கிற்கு சேட்டையை தொடங்கினார்.

 சஹால் செய்த சேட்டை

சஹால் செய்த சேட்டை

கே.எல்.ராகுலின் பதிலுக்கு, "பகவானை யாரானேம் ரூ.10 லட்சம் கொடுத்து வாங்குவார்களா? என நகைச்சுவையாக கேட்டார். அதாவது ஷர்துல் தாக்கூரை "லார்ட்" ஷர்துல் என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இதனை கிண்டல் அடிக்கும் வகையில் தான் யுவேந்திர சஹால் கடவுளை குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தின் மூலம் ஐபிஎல் ஃபீஃபர் வீரர்களுக்கு வந்துவிட்டது என்பதை உணரலாம்.

அணிகளின் திட்டம்

அணிகளின் திட்டம்

உண்மையில் ஷர்துல் மற்றும் சஹால் இருவரையும், பழைய அணிகளே மீண்டும் ஏலத்தில் எடுக்க ஆவலுடன் உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கான ஒருநாள் போட்டியில் 40, 50 ரன்களை விளாசிய ஷர்துல் விக்கெட்களும் கைப்பற்றினார். இதனால் அவரை கைப்பற்ற சிஎஸ்கே முனைப்பு காட்டுகிறது. இதே போல சஹாலை மீண்டும் எடுக்க ஆர்சிபி அணி திட்டமிட்டு வருகிறது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
See how Shardul thakur asks KL Rahul for a chance in Lucknow team, and he gives a hilarious reply
Story first published: Friday, January 28, 2022, 15:22 [IST]
Other articles published on Jan 28, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X