For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சச்சின் சாதனையை உடைக்க கே.எல்.ராகுலுக்கு அரிய வாய்ப்பு..!! கேப்டனாக சாதிப்பாரா ராகுல்..?

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி புதன்கிழமை இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது

இந்தப் போட்டியில் இந்திய ஒருநாள் அணிக்கு முதல் முறையாக கே.எல்.ராகுல் தலைமை தாங்குகிறார்.

புஜாரா, ரஹானே நீக்கம்..?? 2 இடத்துக்கு போட்டி போடும் 6 இளம் வீரர்கள்..டெஸ்டில் யாருக்கு வாய்ப்பு..??புஜாரா, ரஹானே நீக்கம்..?? 2 இடத்துக்கு போட்டி போடும் 6 இளம் வீரர்கள்..டெஸ்டில் யாருக்கு வாய்ப்பு..??

ரோகித் சர்மா இல்லாததால் , இந்த தொடரில் தாம் தொடக்க வீரராக களமிறங்க உள்ளதாக கே.எல்.ராகுல் கூறினார்.

கே.எல்.ராகுல் பேட்டிங்

கே.எல்.ராகுல் பேட்டிங்

ஐ.பி.எல். போட்டியில் கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டுள்ளதால், அவருக்கு அந்த அனுபவம் கைக் கொடுக்கும். கேப்டனாக செயல்படும் போது கே.எல்.ராகுல் அணியின் முழு பொறுப்பையும் ஏற்று கொண்டு பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவதை வழக்கமாக கொண்டவர். இது தலைமை பண்புக்கு ஏற்றது என்பதால், நாளைய போட்டியில் ராகுல் அது போன்று செயல்படுவார்

மோசம்

மோசம்

ஆனால் கே.எல்.ராகுல் மீது வைக்கப்படும் பெரிய குற்றச்சாட்டே பெரிய இலக்கை கூட எதிரணியை எளிதாக துரத்தி எட்டவிட்டு விடுவார் என்பது தான். பஞ்சாப் அணி 200 ரன்கள் அடித்தாலும், கே.எல்.ராகுல் கேப்டனாக இருக்கும் போது எதிரணி அந்த இலக்கை எளிதில் எட்டும். இதனால் ஃபில்டிங்கை எப்படி நிறுத்துவது, பந்துவீச்சாளர்களுக்கு சூழலுக்கு ஏற்ப ஓவர்களை தருவது போன்ற விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்

வாய்ப்பு

வாய்ப்பு

இன்றைய பேட்டியின் போது தாம் ஒரு மனிதன் தான் என்றும், அதனால் தவறு செய்வேன், அந்த தவறிலிருந்து கற்று கொள்வேன் என்று கூறியிருந்தார்.இது உண்மையில் ஒரு நல்ல எண்ணமாகும். ஆனால் அந்த தவறிலிருந்து எப்படி, எவ்வளவு விரைவில் பாடம் கற்கிறார் என்பதை பொருத்தே அவர் கேப்டனாக சாதிப்பாரா இல்லையா என்பது சொல்ல முடியும். மொத்தத்தில் ராகுலுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

சச்சின் சாதனை

சச்சின் சாதனை

இந்த நிலையில், கேப்டனாக களமிறங்கும் முதல் போட்டியில் சச்சினின் சாதனையை முறியடிக்க கே.எல்.ராகுலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சச்சின் கேப்டனாக முதல் போட்டியில் 110 ரன்களும், தவான் 86 ரன்களும், அஜித் வாடேகர் 67 ரன்களும், ரவி சாஸ்த்ரி , அஜய் ஜடேஜா தலா 50 ரன்களும் எடுத்தனர். நாளை பேட்டிங்கிற்கு சாதகமான, சின்ன பவுண்டரிகளை உடைய மைதானத்தில் தொடக்க வீரராக களமிறங்கும் ராகுலுக்கு இந்த சாதனைகளை உடைக்க சிறப்பான வாய்ப்பாகும்.

Story first published: Tuesday, January 18, 2022, 21:18 [IST]
Other articles published on Jan 18, 2022
English summary
KL Rahul is all set to break Sachin record in his odi captain debut சச்சின் சாதனையை உடைக்க கே.எல்.ராகுலுக்கு அரிய வாய்ப்பு..!! கேப்டனாக சாதிப்பாரா ராகுல்..?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X