For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4ம் வரிசையில் இவரை இறக்குங்க…. ச்சும்மா தூள் பண்ணுவாரு…!! ராகுலுக்கு கம்பு சுத்தும் கம்பீர்

மும்பை:உலக கோப்பை தொடரில் 4ம் வரிசையில் கேஎல் ராகுலை களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னர் ஆரம்பித்தது 4ம் வீரராக யார் களம் இறங்குவது என்று. அந்த தொடர் முடிந்த பின்னரும் இன்னும் பலர் அவரை இறக்கலாம், இவர் சரியாக இருப்பார் என்று கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் கம்பீர் இப்போது லேட்டஸ்டாக கருத்து சொல்லி இருக்கிறார்.

Kl rahul is suitable batsman for number 4 in the world cup says gambhir

அவர் கூறியதாவது:இந்த விஷயத்தில் 4ம் வரிசை வீரராக யாரை இறக்குவது என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும். ஏன் என்றால் அந்த வரிசையில் ஆடுவது என்பது முக்கியமானது. இந்த விஷயத்தில் நான் கே எல் ராகுலுக்கு ஆதரவு கொடுப்பேன்.

உலக கோப்பையில் இந்திய அணி இவரை கட்டாயம் மிஸ் பண்ணும்..! தாதா... நீங்க யாரச் சொல்றீங்க? உலக கோப்பையில் இந்திய அணி இவரை கட்டாயம் மிஸ் பண்ணும்..! தாதா... நீங்க யாரச் சொல்றீங்க?

4ம் வரிசை வீரராக அவரை அணியில் களம் இறக்கலாம். விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக்கை விட ராகுலின் தேர்வு சிறப்பாக இருக்கும். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இருக்கிறார். அதே போன்று வரவிருக்கும் உலக கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.

எனவே, 4ம் வரிசைக்கு அவர்தான் பொருத்தமானவராக இருப்பார் என்று கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போதைய அணியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் 4ம் வரிசையில் களம் இறக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ஏன் என்றால் விஜய் சங்கர் நிதானமாக ஆடக்கூடியவர். தேவைப்படும் நேரத்தில் அதிரடியாகவும் விளையாடுபவர். ஆட்டத்தின் தேவைக்கு ஏற்ப அவர் தம்மை மாற்றிக் கொள்வார். சிறப்பாகவும் பந்து வீசுவார் என்றும் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியிருந்தார். ஆனாலும் இந்த 4ம் வரிசை வீரர் உலக கோப்பை முடிந்த பின்னரும் ஓயாது போலிருக்கு.

Story first published: Tuesday, May 14, 2019, 16:45 [IST]
Other articles published on May 14, 2019
English summary
Kl rahul is suitable batsman for number 4 in the world cup says gambhir.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X