For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் நோ சான்ஸ்..! ஐபிஎல் டீமிலும் காலி..! தமிழக வீரருக்கு வைக்கப்பட்ட ஆப்பு..!!

மும்பை: பஞ்சாப் அணியில் இருந்து அஸ்வினை கழற்றிவிட்டு, கேஎல் ராகுலை கேப்டனாக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர பவுலர்களில் வரிசையில் இருப்பவர் அஸ்வின். தற்போது இந்திய ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு வாய்ப்புகள் அளிக்கப் படுவது இல்லை. கோலியின் தலையீடும், இளம்வீரர்களின் வருகையுமே அதற்கு காரணம் என்று கூறப் படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில், டெஸ்ட் போட்டிகளில் சேர்க்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் அவர் பெயர் இல்லை. அணியில் சேர்க்கப்படவில்லை.இது அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது. முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் அஸ்வின் நீக்கம் குறித்து கேள்விகளை எழுப்பினர்.

கேப்டன்ஷிப் காலி

கேப்டன்ஷிப் காலி

இந் நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் பொறுப்பும், அந்த அணியில் தான் விளையாடும் வாய்ப்பையும் அவர் இழக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அஸ்வினை வேறொரு அணிக்கு விற்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் முடிவெடுத்து ள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் கூட்டம்

விரைவில் கூட்டம்

இது தொடர்பான முடிவுகள், கிங்ஸ் லெவன் அணி உரிமையாளர்கள் சந்திப்பில் விரைவில் எடுக்கப்படும் என்று தெரிய வந்திருக்கிறது. அந்த கூட்டம் மிக விரைவில் கூட்டப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

வீரர்கள் பரிமாற்றம்

வீரர்கள் பரிமாற்றம்

மேலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி அஸ்வின் மீது ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. அதற்காக அஸ்வினை நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ளுமா? அல்லது வீரர்கள் பரிமாற்றம் மூலம் அஸ்வின் மாற்றி கொள்ளப்படுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

கிருஷ்ணப்பா கவுதம்

கிருஷ்ணப்பா கவுதம்

வீரர்கள் மாற்றம் என்ற அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால், கிருஷ்ணப்பா கவுதமை கிங்ஸ் லெவனுக்கு கொடுத்து விட்டு அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கி கொள்ளலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கிருஷ்ணப்பா கவுதம் யாருமல்ல... கேபிஎல் எனப்படும் கர்நாடக பிரிமீயர் லீக் தொடரில் 39 பந்துகளில் சதமடித்து, 134 ரன்களை குவித்தவர். மேலும் பந்துவீச்சிலும் கலக்கி 8 விக்கெட்டுகளை சாய்த்தவர்.

கேப்டனாகும் ராகுல் ?

கேப்டனாகும் ராகுல் ?

மேலும் டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையின் கீழோ அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் என்றால் ஸ்டீவ் ஸ்மித்தின் தலைமையின் கீழோ அஸ்வின் விளையாடக்கூடும். அஸ்வினுக்கு பதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடரும் அதிர்ச்சி

தொடரும் அதிர்ச்சி

2018ல் அஸ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினால் ரூ.7.6 கோடிக்கு வாங்கப்பட்டார். 2018ம் ஆண்டு சீசனில் அஸ்வின் தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 7ம் இடத்தை பிடித்தது. 2019ம் ஆண்டு தொடரில் 6ம் இடத்திலும் இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்டில் அஸ்வின் சேர்க்கப்படாத நிலையில், கிங்ஸ் லெவன் விஷயமும் முடிவுக்கு வருவதால் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

Story first published: Saturday, August 24, 2019, 19:21 [IST]
Other articles published on Aug 24, 2019
English summary
Kl rahul may replace ashwin as a captain in kings xi punjab, sources said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X