For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முக்கிய வாய்ப்பு போச்சே.. ஜிம்பாப்வே தொடரில் தவறு செய்த கே.எல்.ராகுல்.. ஆசிய கோப்பையில் சிக்கல்!!

ஹராரே: இந்திய அணியில் தனக்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பை கே.எல்.ராகுல் பயன்படுத்திக்கொள்ள தவறியுள்ளார்.

Recommended Video

IND vs PAK போட்டி குறித்து Rohit Sharma தரமான விளக்கம்

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பிளேயிங் லெவனில் நாளை 2 மாற்றம்.. முக்கிய வீரருக்கு வாய்ப்பு.. காய் நகர்த்தும் ராகுல்- லட்சுமணன்பிளேயிங் லெவனில் நாளை 2 மாற்றம்.. முக்கிய வீரருக்கு வாய்ப்பு.. காய் நகர்த்தும் ராகுல்- லட்சுமணன்

முதல் ஒருநாள் ஆட்டம்

முதல் ஒருநாள் ஆட்டம்

சீனியர் வீரர்கள் ஆசிய கோப்பை தொடருக்காக தயாராகி வருவதால், இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி உருவாக்கப்பட்டிருந்தது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரின் கேப்டன்சியில் இந்திய அணி முதல் முறையாக வெற்றியை பெற்றுள்ளது.

வாய்ப்பு கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைக்கவில்லை

கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்ட போதும், பேட்டிங்கில் தனது வாய்ப்பை இழந்துள்ளார். ஷிகர் தவானுடன் அவர் ஓப்பனிங் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக சுப்மன் கில் களமிறங்கினார். அவர்கள் இருவரும் சேர்ந்தே அவுட்டாகாமல் 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

தவறிய வாய்ப்பு

தவறிய வாய்ப்பு

காயம் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட்டே விளையாடாமல் இருந்த கே.எல்.ராகுல், ஆசிய கோப்பை தொடரில் நேரடியாக சேர்க்கப்பட்டார். அதுவும் ஓப்பனராக ரோகித் சர்மாவுடன் அவர் மட்டுமே இருக்கிறார். எனவே ஜிம்பாப்வே தொடரில் ஓப்பனராக விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கே.எல்.ராகுல் இருக்கிறார்.

வல்லுநர்கள் எச்சரிக்கை

வல்லுநர்கள் எச்சரிக்கை

ஒருவேளை கே.எல்.ராகுலால் சிறப்பாக விளையாட முடியாவிட்டால், அவருக்கு மாற்றாக ஸ்ரேயாஸ் ஐயர் ஆசிய கோப்பை அணியில் சேர்க்கப்படுவார். எனவே மீதமுள்ள 2 போட்டிகளில் கே.எல்.ராகுல் தனக்கான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதுதான் அவரின் எதிர்காலத்திற்கு நல்லது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Story first published: Friday, August 19, 2022, 20:21 [IST]
Other articles published on Aug 19, 2022
English summary
KL Rahul in asia cup 2022 ( இந்தியா vs ஜிம்பாப்வே தொடர் ) ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் முக்கிய வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X