For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய அணியின் முக்கிய வீரருக்கு காயம். இளம் வீரருக்கு அடிச்சது லக்..!!

மும்பை; இந்திய அணிக்கு சுற்றுப் பயண்ம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Recommended Video

Suryakumar Yadav added to Test squad for New Zealand series | OneIndia Tamil

டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பழித் தீர்க்கும் உத்வேகத்துடன் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.

3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!

விராட் கோலி, (முதல் டெஸ்ட் ) ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு சீனியர் வீரர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

கே.எல்.ராகுலுக்கு காயம்

கே.எல்.ராகுலுக்கு காயம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து, டெஸ்ட் அணியில் நிரந்திர இடம் பிடித்தவர் கே.எல்.ராகுல். ஐ.பி.எல். டெஸ்ட், டி-20 என தொடர்ந்து விளையாடிய அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ள கே.எல்.ராகுல், முழு உடல் தகுதி பெற பெங்களூருவில் உள்ள என்.சி.ஏ. மையத்திற்கு வர உள்ளார்.

சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ்

ராகுல் விலகியுள்ளதால் இந்திய அணியின் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ்க்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. மும்பை அணிக்காக விளையாடக் கூடிய சூர்யகுமார் யாதவ் உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 56 ரன்களை அடித்துள்ளார். கடந்த 2019-2020 ஆண்டு ரஞ்சி சீசனில் சூர்யகுமார் யாதவ் 508 ரன்களை விளாசியுள்ளார்.

அணியில் இடமில்லை

அணியில் இடமில்லை

இதனிடையே டெஸ்ட் போட்டிகளுக்காவே தன்னை தயார்படுத்தி கொண்டுள்ள விஹாரிக்கு இந்திய அணியில் இடமில்லை. இத தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அவரை அவசரம் அவசரமாக தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய ஏ அணியில் தேர்வுக் குழுவினர் தேர்வு செய்தனர்.

உத்சேச அணி

உத்சேச அணி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் உத்சே பட்டியல் 1, மாயங் அகர்வால், 2, சுப்மான் கில், 3. புஜாரா, 4, ரஹானே, 5, சூர்யகுமார் யாதவ், 6. விதர்மன் சாஹா 7, ஜடேஜா 8, அஸ்வின், 9, அக்சர் பட்டேல், 10, இஷாந்த் சர்மா, 11,உமேஷ் யாதவ்

Story first published: Tuesday, November 23, 2021, 17:36 [IST]
Other articles published on Nov 23, 2021
English summary
KL Rahul ruled out of NZ Test series, Suryakumar Yadav Replaces KL Rahul ahead of Kanpur Test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X