For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சபாஷ்… கோலி…! ஐசிசி விருதுகளை ஒட்டுமொத்தமாக அள்ளிய இந்திய வீரர்கள்…!

Recommended Video

ஐசிசி-க்கு சச்சின் டெண்டுல்கர் பதிலடி | ஐசிசி விருதுகளை ஒட்டுமொத்தமாக அள்ளிய இந்திய வீரர்கள்- வீடியோ

டெல்லி:ஐசிசி அறிவித்துள்ள ஒட்டுமொத்த விருதுகளையும் இந்திய கிரிக்கெட் அணியினர் கைப்பற்றி இருப்பது, பாராட்டை பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்த விருது உலக கோப்பை தொடருக்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளது. பேட்டிங், பவுலிங், ஆல் ரவுண்டர் போன்றவற்றுக்கு சியட் சர்வதேச கிரிக்கெட் விருது வழங்கப்படுவது வழக்கம்.

 Kohli and others got ceat international award

அதில் ஏற்கனவே 3 விருதுகளை பெற்ற இந்திய அணியின் கேப்டன் கோலி தற்போது சியாட் சர்வதேச சிறந்த வீரர் விருது மற்றும் அங்கீரிக்கப்பட்ட வீரர் விருது 2 விருதுகளையும் வென்று மொத்தம் 5 விருதுகளை பெற உள்ளார். மேலும் ஆண்டின் சிறந்த சர்வதேச பவுலராக ஜஸ்பிரித் பும்ரா விருது பெற உள்ளார்.

விருது பெறும் மற்ற வீரர்களின் பட்டியல் :

மொஹீந்தர் அமர்நாத் : வாழ்நாள் சாதனையாளர் விருது

விராட் கோலி : சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன்

ஜஸ்பிரித் பும்ரா : ஆண்டின் சிறந்த சர்வதேச பவுலர்

சட்டேஸ்வர் புஜாரா : ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்

ரோகித் சர்மா : ஆண்டின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்

ஆரோன் பிஞ்ச் : ஆண்டின் சிறந்த சர்வதேச டி 20 பேட்ஸ்மேன்

குல்தீப் யாதவ் : ஆண்டின் மிகச்சிறந்த செயல்திறன் மிக்க வீரர்

ரஷித் கான் : மிகச்சிறந்த சர்வதேச டி 20 கிரிக்கெட் பவுலர்

அசுதோஷ் அமன் : உள்ளூர் போட்டிகளில் சிறந்த வீரர்

ஸ்மிருதி மந்தானா: ஆண்டின் சர்வதேச சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை

யஷ்யாஷி ஜெய்ஸ்வால்: ஆண்டின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்

ஸ்ரீராம் வீரா மற்றும் ஸ்னேஹல் பிரதான் : ஆண்டின் சிறந்த கிரிக்கெட் பத்திரிகையாளர்கள்

மறைந்த அஜித் வடேகர் : கிரிக்கெட்டுக்கான சிறப்பு அஞ்சலி

கிட்டத்தட்ட அனைத்து வகையான விருதுகளையும் இந்திய வீரர்களே வென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 15, 2019, 19:42 [IST]
Other articles published on May 15, 2019
English summary
Skipper Kohli and others got ceat international award.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X