For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தல தோனியோட அந்த திறமையெல்லாம் கோலிக்கு வரவே வராது... கழுவி, கழுவி ஊற்றிய பயிற்சியாளர்

Recommended Video

தோனியோட திறமையெல்லாம் கோலிக்கு வராது.. தோனியின் சிறு வயது பயிற்சியாளர்- வீடியோ

ராஞ்சி:தோனியை போன்று ஒவ்வொரு போட்டியையும் முன்கூட்டியே கணிக்கும் திறமை விராட் கோலியிடம் இல்லவே இல்லை என்று தோனியின் சிறு வயது பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி கூறியிருக்கிறார்.

இங்கிலாந்தில் வரும் 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் இதில் பங்கேற்கின்றன. அணிகளின் வீரர்கள் பட்டியலும் கிட்டத்தட்ட வெளியிடப்பட்டு விட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

Kohli doesn’t have game reading quality like dhoni, says his childhood coach keshav ranjan banerjee

இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. கோலியின் தலைமையில் 15 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. அதன் மூலம் 4வது வீரர் யார் என்ற சர்ச்சையும் ஒரு வழியாக ஓய்ந்தது. இந்நிலையில், கேப்டன் கோலி பற்றி தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியிருப்பதாவது:உலக கோப்பைக்கான இந்திய அணியில் தோனி இருப்பது மிகப்பெரிய பலம். அவருக்கு இருக்கும் தனித்திறமை, கேப்டன் கோலியிடம் இல்லை. அதாவது,போட்டியின் போக்கை கூர்ந்து கவனிக்கும் திறனும், வித்தியாசமான அனுகுமுறையும், தோனியின் தனித்திறமையாகும்.

2012இல் என்ன நடந்ததோ அது மறுபடியும் நடக்கப் போகுது.. சிஎஸ்கே ஃபைனலுக்கு போகப் போகுது! ரசிகர்கள் குஷி 2012இல் என்ன நடந்ததோ அது மறுபடியும் நடக்கப் போகுது.. சிஎஸ்கே ஃபைனலுக்கு போகப் போகுது! ரசிகர்கள் குஷி

அந்த திறமைகள் எதுவும் கோலியிடம் இல்லை. அதுபோன்ற திறமைகள் அவருக்கு கிடைக்கவும், கிடைக்காது. வரவிருக்கும் உலக கோப்பை போட்டியில், இந்த டெக்னிக்குகளை தோனியிடம் இருந்து பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கோலிக்கு கிடைத்திருக்கிறது. நடப்பு உலக கோப்பை தொடரில் தோனியை 4வது இடத்தில் களமிறக்க வேண்டும் என்று கேசவ் ரஞ்சன் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, May 10, 2019, 12:22 [IST]
Other articles published on May 10, 2019
English summary
Kohli doesn’t have game reading quality like dhoni says his child hood coach Keshav Ranjan Banerjee.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X