For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலிக்கு அடுத்த 2 போட்டிகளில் விளையாட தடை..? ஐசிசி முடிவால் ரசிகர்கள் ஒட்டுமொத்த அதிர்ச்சி

சவுதாம்ப்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் கோலிக்கு 2 போட்டிகளில் தடை விதிக்கப் படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சவுதாம்டனில் நேற்று ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2வது இன்னிங்ஸின் 29வது ஓவரை பும்ரா வீசினார். அதை ரஹ்மத் ஷா எதிர் கொண்ட போது பும்ரா வீசிய ஒரு பந்து அவரது கால்காப்பில் பட்டது. அதற்கு இந்திய வீரர்கள் எல்பிடபிள்யு கேட்டு நடுவர் அலீம் தாரிடம் முறையிட்டனர்.

அது நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது, ஆவேசமாகச் சென்ற கேப்டன் கோலி, நடுவர் அலீம் தாரிடம் வாக்குவாதம் செய்தார். கையெடுத்து கும்பிட்டார். அவரது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

கோலி மீது புகார்

கோலி மீது புகார்

கோலியின் இந்த செயல் குறித்து நடுவர்கள் அலீம் தார், ரிச்சர் இல்லிங்வொர்த், 3வது நடுவர் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ ஆகியோர் ஐசிசியிடம் புகார் அளித்தனர். இதை யடுத்து, கோலியை அழைத்து, ஐசிசி போட்டி நடுவர் கிறிஸ் பிராட் விசாரணை நடத்தினார். அப்போது தான் செய்த தவறை கோலி ஒப்புக் கொண்டு, தண்டனையை ஏற்பதாகவும் கூறினார்.

அபராதம் விதிப்பு

அபராதம் விதிப்பு

இதையடுத்து விதிமுறைகள் கோலி மீறியது உறுதியானதால், போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதத்தை அபராதமாகச் செலுத்த ஐசிசி போட்டி நடுவர் குழு உத்தரவிட்டது. இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபடும் வீரருக்கு அதிகபட்சமாக ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் அல்லது ஒன்று அல்லது 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும்.

கோலிக்கு எச்சரிக்கை

கோலிக்கு எச்சரிக்கை

அந்த வகையில் கோலிக்கு 25 சதவீத அபராதமும், ஒரு எச்சரிக்கைப் புள்ளியும் வழங்கப்பட்டது. ஏற்கெனவே, 2018ம் ஆண்டு, ஜனவரி 15ம் தேதி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட கோலிக்கு, அப்போது ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டது. இப்போது இது 2வது எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

2 போட்டிகளில் தடை

2 போட்டிகளில் தடை

ஒரு வீரர் 2 ஆண்டுகளுக்குள் 4 எச்சரிக்கைப் புள்ளிகளுக்கு மேல் எடுத்தால், அவருக்கு தடை விதிக்கவோ, சஸ்பெண்ட் செய்யவோ அதிகாரம் உண்டு. கோலிக்கு இது 2வது எச்சரிக்கை என்பதால், அடுத்து 2 ஒருநாள் போட்டிகளில் கோலி பங்கேற்பது சந்தேகம் தான். ஆனால் அதுகுறித்து ஐசிசி ஏதும் அறிவிக்க வில்லை.

Story first published: Sunday, June 23, 2019, 15:59 [IST]
Other articles published on Jun 23, 2019
English summary
Kohli fined for excessive appealing against Afghanistan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X