For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலிதான் என்னை காப்பாற்றியது.. அவர் இல்லையென்றால் அவ்வளவுதான்.. உருகிய ரஹானே.. செம பின்னணி

சென்னை: இந்திய அணியின் கேப்டன் கோலிதான் என்னை காப்பாற்றினார் என்று துணை கேப்டன் ரஹானே பேட்டி அளித்துள்ளார் .

இங்கிலாந்து - இந்தியா இடையே டெஸ்ட், ஒருநாள், டி 20 என்று மிக நீண்ட தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றிபெற்றால் டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.

இதனால் இந்த தொடரில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று இந்திய அணி உறுதியாக உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது.

பேட்டி

பேட்டி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானே செயல்பட்டார். இவரின் கேப்டன்சிக்கு கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் கேப்டன் கோலி குறித்து ரஹானே பேட்டி அளித்துள்ளார்.

 ரஹானே

ரஹானே

இந்த நிலையில் ரஹானே அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியில் என்னுடைய இடம் எப்போதும் சிக்கலில் இருந்தது இல்லை. என்னை தூக்கி விடுவார்களோ என்று நான் கவலைப்பட்டது எல்லாம் இல்லை. எனக்கு எப்போதுமே அணி நிர்வாகம் முழு நம்பிக்கை அளித்தது.

நிலைமை எப்படி

நிலைமை எப்படி

என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி, முறையான வாய்ப்பை வழங்கி வந்தனர். என் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்து இருந்தனர். நான் சில மாதங்கள் சரியாக ஆட முடியாமல் கஷ்டப்பட்டேன். பார்மிற்கு திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டேன்.

அழுத்தம்

அழுத்தம்

அது எனக்கு பெரிய அழுத்தத்தை கொடுத்தது. கேப்டன் கோலிதான் எனக்கு ஆலோசனை வழங்கினார். என்னை சரியான பாதைக்கு திருப்பியது கேப்டன் கோலிதான். அவர்தான் என்னை காப்பாற்றியது. உங்களுடைய கேப்டன் உங்களை சப்போர்ட் செய்கிறார் என்பது பெரிய பலத்தை கொடுக்கும்.

துணையாக இருப்பேன்

துணையாக இருப்பேன்

உங்களுக்கு துணையாக உங்கள் கேப்டன் இருக்கிறார். கஷ்டப்படும் போது உங்களுக்கு ஆதரவாக கேப்டன் இருக்கிறார் என்பது உங்களுக்கு பெரிய பலத்தை கொடுக்கும். எனக்கு கோலி அப்படித்தான் எப்போதும் உறுதுணையாக இருக்கிறார்.

நன்றி சொன்னார்

நன்றி சொன்னார்

கோலி என் மீது வைத்து இருக்கும் எதிர்பார்ப்பை எப்போதும் பூர்த்தி செய்வேன். அவர் என்னை நம்புகிறார். அவரின் துணை கேப்டனாக எப்போதும் அவருக்கு உறுதுணையாக நான் இருப்பேன் என்று ரஹானே உருக்கமாக குறிப்பிட்டுள்ளார் .

Story first published: Wednesday, January 27, 2021, 18:44 [IST]
Other articles published on Jan 27, 2021
English summary
Captain Kohli helped me during my tough times says Rahane.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X